• Nov 25 2024

நாட்டில் அரிசிக்கு திடீர் தட்டுப்பாடு - இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

Chithra / Oct 28th 2024, 8:59 am
image


சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. 

நாட்டில் உள்ள பாரியளவிலான அரிசி ஆலைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் களஞ்சியசாலைகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக காணப்பட்ட அரிசி கையிருப்பு தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

அரிசி ஆலை உரிமையாளர் வர்த்தகர் டட்லி சிறிசேனவுக்கு சொந்தமான அரலிய அரிசி நிறுவனம் உள்ளிட்ட மேலும் சில அரிசி ஆலைகளில் இந்த இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, அரிசி ஆலைகளில் உள்ள நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். 

சந்தையில் அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டு, இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.


நாட்டில் அரிசிக்கு திடீர் தட்டுப்பாடு - இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் உள்ள பாரியளவிலான அரிசி ஆலைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் களஞ்சியசாலைகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக காணப்பட்ட அரிசி கையிருப்பு தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர் வர்த்தகர் டட்லி சிறிசேனவுக்கு சொந்தமான அரலிய அரிசி நிறுவனம் உள்ளிட்ட மேலும் சில அரிசி ஆலைகளில் இந்த இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரிசி ஆலைகளில் உள்ள நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். சந்தையில் அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டு, இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement