கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரை கொலை செய்யத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் குழுவினர் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகாடேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர்கள் தங்கியிருப்பதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டை நேற்று (03) இரவு பொலிஸார் முற்றுகையிட்டனர்.
ஆனால், பொலிஸாரைக் கண்ட சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இன்னொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இங்குதான் முக்கியமான திருப்பம்...
வீட்டை சோதனையிட்டபோது அவற்றில் 9 மில்லி மீட்டர் ரக பிஸ்டல் துப்பாக்கி, 8 தோட்டாக்கள் அடங்கிய அதன் மெகசின், ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் அதன் 6 தோட்டாக்கள், 9 மில்லிமீட்டர் ரக மெகசின் மற்றும் 6 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டன.
மேலும், போலி இலக்கத் தகடுகளுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டன.
பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 33 வயதுடைய மஹஇந்துருவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,
கொஸ்கொட பொலிஸாரும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
'லொகு பெட்டி' தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் சிலர், 'கரந்தெனிய சுத்த' தரப்பைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'லொகு பெட்டி' என்ற குற்றவாளியின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவர் கடந்த 01 ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதற்குப் பின்னால் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நள்ளிரவில் திடீரென பாய்ந்த தோட்டாக்கள் 4 உயிர்களை குறிவைத்த கும்பலின் திட்டம் அம்பலம் கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரை கொலை செய்யத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் குழுவினர் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அகாடேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர்கள் தங்கியிருப்பதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டை நேற்று (03) இரவு பொலிஸார் முற்றுகையிட்டனர்.ஆனால், பொலிஸாரைக் கண்ட சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இன்னொருவர் தப்பிச் சென்றுள்ளார்.இங்குதான் முக்கியமான திருப்பம்.வீட்டை சோதனையிட்டபோது அவற்றில் 9 மில்லி மீட்டர் ரக பிஸ்டல் துப்பாக்கி, 8 தோட்டாக்கள் அடங்கிய அதன் மெகசின், ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் அதன் 6 தோட்டாக்கள், 9 மில்லிமீட்டர் ரக மெகசின் மற்றும் 6 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டன.மேலும், போலி இலக்கத் தகடுகளுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டன.பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 33 வயதுடைய மஹஇந்துருவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொஸ்கொட பொலிஸாரும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 'லொகு பெட்டி' தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் சிலர், 'கரந்தெனிய சுத்த' தரப்பைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இத்துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'லொகு பெட்டி' என்ற குற்றவாளியின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவர் கடந்த 01 ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்குப் பின்னால் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.