கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியால் சமர்ப்பிக்கப்பட்ட மனு எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.
இதன் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் எதிர்வரும் 8 வாரங்களுக்குள் அதனைத் தாக்கல் செய்யுமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் முதல் நான்கு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட பிரதிவாதிகளின் பட்டியலைத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
சீனி இறக்குமதி மோசடி - உயர்நீதிமன்றம் எடுத்த தீர்மானம் கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியால் சமர்ப்பிக்கப்பட்ட மனு எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.இதன் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் எதிர்வரும் 8 வாரங்களுக்குள் அதனைத் தாக்கல் செய்யுமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், அன்றைய தினம் முதல் நான்கு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட பிரதிவாதிகளின் பட்டியலைத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் மேலும் உத்தரவிட்டுள்ளது.