கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான நீலச் சமர் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண இணைந்துகொண்டார்.
மைதானத்திற்கு வருகை தந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி, மைதானத்திற்கு வருகை தந்த மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ஹர்ஷ டி சில்வா மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து இரசித்த சுமந்திரன் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான நீலச் சமர் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண இணைந்துகொண்டார்.மைதானத்திற்கு வருகை தந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி, மைதானத்திற்கு வருகை தந்த மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ஹர்ஷ டி சில்வா மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.