• Dec 21 2024

தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருந்து கொண்டு அரச நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் சுமந்திரன் எம்.பி..!

Sharmi / Sep 17th 2024, 2:36 pm
image

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவருக்கு அரசியல் அறிவு பூச்சியம் என மாவீரர் போராளிகள் குடும்பநல காப்பகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தலைவர் மக்களை சரியான வழியில் வழி நடத்திச் சென்றார். 

ஆனால் 2009க்கு பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு ஏற்ற தலைமைத்துவம் காணப்படாத நிலையில் தமிழ் மக்கள் அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளனர். 

தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பொதுவேட்பாளருக்கு எமது ஆதரவை வழங்கி அதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறோம். 

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மிதவாத அரசியல்வாதிகள் தமது சுயலாப அரசியலை மேற்கொண்டுவருவதன் காரணமாக வெந்து போன மக்கள் மீண்டும் வேக வைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.

அவருடன் சக வேட்பாளராக போட்டியிட்ட திருமதி சசிகலா ரவிராஜ் வாக்குகள் மூலம் வெல்ல வைக்கப்பட்டவர் என்பது அப்போது பேசப்பட்ட விடயம். 

சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்தாலும் அரசியலில் அவர் பூச்சியமாகவே பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் அவர் நிலையான கருத்துக்களை கூறமாட்டார். தெற்கில் ஒரு கருத்தையும் வடக்கில் ஒரு கருத்தையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக தெரிவித்து வருவது அவரின் அரசியல் பூச்சிய நிலையை காட்டுகிறது.

அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி தென்னிலங்கை தரப்பு ஒன்றை வெல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக சுமந்திரன் அறிவித்தமை தொடர்பில் நாங்கள் அதிர்ச்சி கொள்ளத் தேவையில்லை.

ஏனெனில் அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுபவர்.

அவரின் பக்க வாத்தியமான சாணக்கியன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெல்ல முடியாது என்பதற்காக தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தவர். 

லக்ஷ்மன் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள். அதேபோன்று சுமந்திரன், சாணக்கியன் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருந்து கொண்டு அரச நிகழ்ச் நிரலை அரங்கேற்றும் நபர்களாக காணப்படுகின்றனர்.

எங்கள் அமைப்பு அரசியல் செயற்பாடுகளில் விலகி இருந்தாலும், கொள்கை அரசியல் தடுமாறிச் செல்லும் நிலையில் அதனை வெளிப்படுத்துவதற்கு அரசியல் செயற்பாடுகளில் பங்கு பெற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

ஆகவே, மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் யாரை ஆதரிப்பது யாரை அரசியல் அரங்கில் இருந்து நீக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருந்து கொண்டு அரச நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் சுமந்திரன் எம்.பி. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவருக்கு அரசியல் அறிவு பூச்சியம் என மாவீரர் போராளிகள் குடும்பநல காப்பகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தலைவர் மக்களை சரியான வழியில் வழி நடத்திச் சென்றார். ஆனால் 2009க்கு பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு ஏற்ற தலைமைத்துவம் காணப்படாத நிலையில் தமிழ் மக்கள் அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளனர். தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பொதுவேட்பாளருக்கு எமது ஆதரவை வழங்கி அதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறோம். யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மிதவாத அரசியல்வாதிகள் தமது சுயலாப அரசியலை மேற்கொண்டுவருவதன் காரணமாக வெந்து போன மக்கள் மீண்டும் வேக வைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.அவருடன் சக வேட்பாளராக போட்டியிட்ட திருமதி சசிகலா ரவிராஜ் வாக்குகள் மூலம் வெல்ல வைக்கப்பட்டவர் என்பது அப்போது பேசப்பட்ட விடயம். சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்தாலும் அரசியலில் அவர் பூச்சியமாகவே பார்க்கப்படுகிறார்.ஏனெனில் அவர் நிலையான கருத்துக்களை கூறமாட்டார். தெற்கில் ஒரு கருத்தையும் வடக்கில் ஒரு கருத்தையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக தெரிவித்து வருவது அவரின் அரசியல் பூச்சிய நிலையை காட்டுகிறது.அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி தென்னிலங்கை தரப்பு ஒன்றை வெல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக சுமந்திரன் அறிவித்தமை தொடர்பில் நாங்கள் அதிர்ச்சி கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும்.பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுபவர்.அவரின் பக்க வாத்தியமான சாணக்கியன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெல்ல முடியாது என்பதற்காக தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தவர். லக்ஷ்மன் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள். அதேபோன்று சுமந்திரன், சாணக்கியன் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருந்து கொண்டு அரச நிகழ்ச் நிரலை அரங்கேற்றும் நபர்களாக காணப்படுகின்றனர்.எங்கள் அமைப்பு அரசியல் செயற்பாடுகளில் விலகி இருந்தாலும், கொள்கை அரசியல் தடுமாறிச் செல்லும் நிலையில் அதனை வெளிப்படுத்துவதற்கு அரசியல் செயற்பாடுகளில் பங்கு பெற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.ஆகவே, மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் யாரை ஆதரிப்பது யாரை அரசியல் அரங்கில் இருந்து நீக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now