சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுனிதா வில்லியம்ஸும்(Sunita Williams) அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும்(Butch Wilmore) மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளி சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய நிலையில் தற்போது 2 மாதங்களாகியும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களுடைய போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்தவண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ்- வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.குறித்த தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுனிதா வில்லியம்ஸும்(Sunita Williams) அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும்(Butch Wilmore) மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளி சென்றனர்.விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.குறிப்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய நிலையில் தற்போது 2 மாதங்களாகியும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.அவர்களுடைய போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்தவண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.