• Sep 21 2024

எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு! ரிஷாத் எம்.பி. தெரிவிப்பு

Chithra / Jul 28th 2024, 3:27 pm
image

Advertisement

 


எமது கட்சி முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு எழுத்து மூலம் உறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளரையே நாம் ஆதரிப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்  தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாடு நேற்று (27) புத்தளத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்,

புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையோடு வாழுகின்ற போது அந்த மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த இன்று சிலர் பிரதேசவாதம் பேசுகின்றனர்.

அதுபோல புத்தளம் நகர சபையில் உறுப்பினராக வரமுடியாத ஒருவரை எமது கட்சி ஏனைய கட்சி மற்றும் ஆதரவாளர்களின் தியாகத்தினால் பாராளுமன்ற உறுப்பினராக்கினோம். அவரும் ஒரு சிலரை ஏவிவிட்டு எமது கட்சிக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார். நாங்கள் புத்தளத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று இப்போது பிரதேசவாதம் பேசுகிறார்.

புத்தளம் மக்களுக்கும், இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதிலும் அரசியல் இலாபம் காணப்பார்க்கிறார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்த சமூக்கத்திற்கும் அநியாயம் செய்கின்ற கட்சியல்ல. இன, மத பேதங்களுகளுக்கு அப்பால் அனைத்து சமூகத்தையும் வாழ வைக்கும் கட்சியாகும்.

கடந்த ஏழு தசாப்தங்களாக அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகவில்லை. இதில் கவனம் செலுத்திய எமது கட்சி பெரும் அர்ப்பணிப்போடு பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், பல்வேறு வியூகங்களை வகுத்து இரண்டு தடவைகள் அங்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுத்தோம்.

அதுபோல புத்தளம் மாவட்டத்திலும் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்தது. 

புத்தளத்தில் அன்று அரசியல் செய்தவர்கள் தேர்தல் காலங்களில் பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டியிட்டமையால் தொடர்ச்சியாக புத்தளம் சிறுபான்மை மக்கள் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து வந்தனர்.

இதனால் புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் ஒரு கையெழுத்து பெருவதாக இருந்தாலும் வென்னப்புவைக்கும், ஆனமடுவைக்கும் செல்ல வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை காணப்பட்டது.

2001 ஆம் ஆண்டு அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த நான் , 2015 ஆம் ஆண்டு முதல் புத்தளத்தில் எமது கட்சி அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம்.

புத்தளம் மக்கள் பெரும்பான்மை அரசியவாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை அவதானித்த எமது கட்சி முதலில் புத்தளத்திற்கு தேசியப் பட்டியல் மூலம் நவவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்து புத்தளம் மக்களை கௌரவித்தது.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வந்த போது இங்குள்ள மக்கள் அன்போடு அரவணைத்து பாடசாலைகளில் தங்க வைத்து தேவையான உதவிகளை வழங்கினார்கள். தமது காணிகளை கொடுத்து கொட்டில்களை அமைத்துக் கொடுத்து வடக்கு முஸ்லிம் சமூகத்தை வாழ வைத்தார்கள்.

இவ்வாறு வடக்கு முஸ்லிம் மக்களை வாழவைத்த புத்தளம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக, புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு அரசியல் பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக எமது கட்சி கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி ஒன்றை அமைத்து அதன் மூலம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கு தேவையான வியூகங்களை அமைத்துக் கொடுத்தது.

இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசியது மாத்திரமின்றி, புத்தளத்தில் உள்ள ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளோடு நீண்ட காலமாக அங்கத்தவர்களாக இருக்கின்றவர்களையும் சந்தித்து அவர்களையும் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு 11 வேட்பாளர்களின் தியாகங்களும், ஒற்றுமைகளும் ஒன்றினைந்து எமது கட்சிசார்பில் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக பெற்றுக் கொண்டோம்.

மூன்று தசாப்தத்தின் பின்பு புத்தளம் சிறுபான்மை மக்கள் சார்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவார், தேவையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பெரும் பணக்காரன் என்று தன்னைத் தானே மார்தட்டும் இவர் இந்த நாட்டில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத தங்கம் கடத்தல் எனும் கீழ்த்தரமான செயலை செய்து புத்தளம் மாவட்ட மக்களுக்கு மாத்திரமன்றி, முழு நாட்டுக்கும் பெரும் கேவலத்தை ஏற்படுத்தினார்.

தமது தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, தலை குனிந்து வாழ்ந்த சமூகம் முப்பது வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டதன் மூலம் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நம்பியிருந்த புத்தளம் சமூகத்திற்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது சுயநல அரசியல் தேவைக்காக முழு புத்தளம் மக்களுக்கும் தலைகுனிவை உண்டாக்கினார்.

எனவே, புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தொழில்வாய்ப்பு என்று நிறைய தேவைகள் காணப்படுகிறது. இதனை நிறைவேற்றிக் கொடுக்க எமது கட்சி பல திட்டங்களையும் வகுத்திருக்கிறது.

புத்தளம் மாவட்டத்தில் நாங்கள் கட்சி அரசியலை ஆரம்பித்த பின்னர் இந்த மாவட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கி பாதைகளை புனரமைத்துக் கொடுத்தோம். கட்டிடங்களை கட்டிக்கொடுத்தோம். தொழில்வாய்ப்புகளை வழங்கினோம்.

புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்த போது, திடீரென ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. 

ஒரு குறுகிய காலத்தில் புத்தளத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த எங்களை புத்தளம் மாவட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது , கூட்டங்களை நடத்தக் கூடாது என்றெல்லாம் எமது கட்சி ஆதரவாளர்களின் தியாகத்துடன் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் சொல்கிறார்.

புத்தளத்தில் ஏனைய கட்சிகள் வந்து அரசியல் செய்ய முடியுமாக இருந்தால், பொதுக் கூட்டங்களை நடத்த முடியுமாக இருந்தால் எமது கட்சி மாதரதிஅரசியல் செய்ய முடியாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது.

இந்த விடயத்தில் புத்தளத்தில் உள்ள கல்விமான்கள், உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலுகான திகதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் , பிரதான கட்சிகள் எங்களை பேசுவதற்காக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே, ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எமது கட்சி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவோம். 

அந்த 10 அம்ச கோரிக்கையில் புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலும் முன்வைக்க இருக்கிறோம். எமது கோரிக்கைகளை எந்த வேட்பாளர் ஏற்று எழுத்துமூலம் உறுதிமொழி வழங்குவார்களோ அவர்களையே எமது கட்சி ஆதரிக்கும்.

எனவே, சுயநல அரசியல் செய்பவர்களுக்கு புத்தளம் சிறுபான்மை மக்கள் அடுத்த தேர்தலில் நல்ல பாடம்புகட்ட வேண்டும். அத்துடன், பிரிந்து நின்று வாக்குகளை சிதறடித்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடாதீர்கள். 

எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு ரிஷாத் எம்.பி. தெரிவிப்பு  எமது கட்சி முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு எழுத்து மூலம் உறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளரையே நாம் ஆதரிப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்  தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாடு நேற்று (27) புத்தளத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்,புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையோடு வாழுகின்ற போது அந்த மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த இன்று சிலர் பிரதேசவாதம் பேசுகின்றனர்.அதுபோல புத்தளம் நகர சபையில் உறுப்பினராக வரமுடியாத ஒருவரை எமது கட்சி ஏனைய கட்சி மற்றும் ஆதரவாளர்களின் தியாகத்தினால் பாராளுமன்ற உறுப்பினராக்கினோம். அவரும் ஒரு சிலரை ஏவிவிட்டு எமது கட்சிக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார். நாங்கள் புத்தளத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று இப்போது பிரதேசவாதம் பேசுகிறார்.புத்தளம் மக்களுக்கும், இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதிலும் அரசியல் இலாபம் காணப்பார்க்கிறார்கள்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்த சமூக்கத்திற்கும் அநியாயம் செய்கின்ற கட்சியல்ல. இன, மத பேதங்களுகளுக்கு அப்பால் அனைத்து சமூகத்தையும் வாழ வைக்கும் கட்சியாகும்.கடந்த ஏழு தசாப்தங்களாக அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாகவில்லை. இதில் கவனம் செலுத்திய எமது கட்சி பெரும் அர்ப்பணிப்போடு பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், பல்வேறு வியூகங்களை வகுத்து இரண்டு தடவைகள் அங்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுத்தோம்.அதுபோல புத்தளம் மாவட்டத்திலும் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்தது. புத்தளத்தில் அன்று அரசியல் செய்தவர்கள் தேர்தல் காலங்களில் பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டியிட்டமையால் தொடர்ச்சியாக புத்தளம் சிறுபான்மை மக்கள் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து வந்தனர்.இதனால் புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் ஒரு கையெழுத்து பெருவதாக இருந்தாலும் வென்னப்புவைக்கும், ஆனமடுவைக்கும் செல்ல வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை காணப்பட்டது.2001 ஆம் ஆண்டு அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த நான் , 2015 ஆம் ஆண்டு முதல் புத்தளத்தில் எமது கட்சி அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம்.புத்தளம் மக்கள் பெரும்பான்மை அரசியவாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை அவதானித்த எமது கட்சி முதலில் புத்தளத்திற்கு தேசியப் பட்டியல் மூலம் நவவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்து புத்தளம் மக்களை கௌரவித்தது.வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வந்த போது இங்குள்ள மக்கள் அன்போடு அரவணைத்து பாடசாலைகளில் தங்க வைத்து தேவையான உதவிகளை வழங்கினார்கள். தமது காணிகளை கொடுத்து கொட்டில்களை அமைத்துக் கொடுத்து வடக்கு முஸ்லிம் சமூகத்தை வாழ வைத்தார்கள்.இவ்வாறு வடக்கு முஸ்லிம் மக்களை வாழவைத்த புத்தளம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக, புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு அரசியல் பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக எமது கட்சி கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி ஒன்றை அமைத்து அதன் மூலம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கு தேவையான வியூகங்களை அமைத்துக் கொடுத்தது.இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசியது மாத்திரமின்றி, புத்தளத்தில் உள்ள ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளோடு நீண்ட காலமாக அங்கத்தவர்களாக இருக்கின்றவர்களையும் சந்தித்து அவர்களையும் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு 11 வேட்பாளர்களின் தியாகங்களும், ஒற்றுமைகளும் ஒன்றினைந்து எமது கட்சிசார்பில் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக பெற்றுக் கொண்டோம்.மூன்று தசாப்தத்தின் பின்பு புத்தளம் சிறுபான்மை மக்கள் சார்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவார், தேவையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பெரும் பணக்காரன் என்று தன்னைத் தானே மார்தட்டும் இவர் இந்த நாட்டில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத தங்கம் கடத்தல் எனும் கீழ்த்தரமான செயலை செய்து புத்தளம் மாவட்ட மக்களுக்கு மாத்திரமன்றி, முழு நாட்டுக்கும் பெரும் கேவலத்தை ஏற்படுத்தினார்.தமது தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, தலை குனிந்து வாழ்ந்த சமூகம் முப்பது வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டதன் மூலம் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நம்பியிருந்த புத்தளம் சமூகத்திற்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது சுயநல அரசியல் தேவைக்காக முழு புத்தளம் மக்களுக்கும் தலைகுனிவை உண்டாக்கினார்.எனவே, புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தொழில்வாய்ப்பு என்று நிறைய தேவைகள் காணப்படுகிறது. இதனை நிறைவேற்றிக் கொடுக்க எமது கட்சி பல திட்டங்களையும் வகுத்திருக்கிறது.புத்தளம் மாவட்டத்தில் நாங்கள் கட்சி அரசியலை ஆரம்பித்த பின்னர் இந்த மாவட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கி பாதைகளை புனரமைத்துக் கொடுத்தோம். கட்டிடங்களை கட்டிக்கொடுத்தோம். தொழில்வாய்ப்புகளை வழங்கினோம்.புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்த போது, திடீரென ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு குறுகிய காலத்தில் புத்தளத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த எங்களை புத்தளம் மாவட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது , கூட்டங்களை நடத்தக் கூடாது என்றெல்லாம் எமது கட்சி ஆதரவாளர்களின் தியாகத்துடன் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் சொல்கிறார்.புத்தளத்தில் ஏனைய கட்சிகள் வந்து அரசியல் செய்ய முடியுமாக இருந்தால், பொதுக் கூட்டங்களை நடத்த முடியுமாக இருந்தால் எமது கட்சி மாதரதிஅரசியல் செய்ய முடியாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது.இந்த விடயத்தில் புத்தளத்தில் உள்ள கல்விமான்கள், உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.ஜனாதிபதி தேர்தலுகான திகதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் , பிரதான கட்சிகள் எங்களை பேசுவதற்காக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எமது கட்சி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவோம். அந்த 10 அம்ச கோரிக்கையில் புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலும் முன்வைக்க இருக்கிறோம். எமது கோரிக்கைகளை எந்த வேட்பாளர் ஏற்று எழுத்துமூலம் உறுதிமொழி வழங்குவார்களோ அவர்களையே எமது கட்சி ஆதரிக்கும்.எனவே, சுயநல அரசியல் செய்பவர்களுக்கு புத்தளம் சிறுபான்மை மக்கள் அடுத்த தேர்தலில் நல்ல பாடம்புகட்ட வேண்டும். அத்துடன், பிரிந்து நின்று வாக்குகளை சிதறடித்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடாதீர்கள். 

Advertisement

Advertisement

Advertisement