• Sep 20 2024

ஜனாதிபதி தேர்தலில் விஜயதாசவிற்கு ஆதரவு?? - பசிலின் அறிவிப்பால் குழப்பம்

Chithra / Aug 11th 2024, 12:15 pm
image

Advertisement


தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்

தம்மிக பெரேரா  போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.

கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல் ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம். 

எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர் விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம்,

அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரேஎ.ன பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் முடிவை நிராகரித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாவட்ட மட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அவ்வாறான முடிவை எடுத்தால் நீதிமன்றம் அதற்கு ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும்  இது அதற்கான நேரமில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு நாங்கள்  தேர்தல் குறித்து கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் விஜயதாசவிற்கு ஆதரவு - பசிலின் அறிவிப்பால் குழப்பம் தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்தம்மிக பெரேரா  போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம்.பிரதமர் தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல் ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம். எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர் விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம்,அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரேஎ.ன பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இதேவேளை கட்சியின் முடிவை நிராகரித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாவட்ட மட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அவ்வாறான முடிவை எடுத்தால் நீதிமன்றம் அதற்கு ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும்  இது அதற்கான நேரமில்லை என தெரிவித்துள்ளனர்.தற்போதைக்கு நாங்கள்  தேர்தல் குறித்து கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement