தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய தினமும் (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்து விசேட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிறைக்கூடத்திற்குள் முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
எனினும் அரசியல் குழுக்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைக் குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நன்மையளிக்காது என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிவரும் சாட்சியங்களின் அடிப்படையில் சில நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மேலதிக விசாரணைகளுக்காக அவர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்படுகின்றன.
இந்த விபரங்கள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், அவ்வப்போது பி அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்கிறது. அதன் அடிப்படையிலேயே சுரேஷ் சலே தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டுமாயின், காவலில் உள்ள சுரேஷ் சலே தமக்குத் தெரிந்த தகவல்களை விரைவாக வழங்க வேண்டும்.விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவர் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கான வழியாகும்.
தவறு செய்திருந்தால் மட்டுமே தகவல்களை மறைக்க வேண்டிய தேவை ஏற்படும். குற்றமற்றவர் என்றால் அச்சப்படாமல் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஊட்டச்சத்து நிலைமையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, அவரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முடியும்.
தடுப்புக் காவல் உத்தரவில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் சில உள்ளன. அவை அனைத்தும் சலேயிற்கு வழங்கப்படுகின்றன.
அவர் மருத்துவ சிகிச்சை கோரியபோது அது வழங்கப்பட்டது; பல் மருத்துவ சிகிச்சை கோரியபோதும் அது வழங்கப்பட்டது. அவருக்கு சிறப்புச் சலுகைகளோ அல்லது புறக்கணிப்புகளோ காட்டப்படவில்லை, சாதாரண நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கும் அதிகாரி ஒருவரை நீக்குமாறு யாராவது கூறினால், அவ்வாறு குற்றம் சுமத்தும் நபரே குற்றவாளி என்பது அதிலிருந்து தெளிவாகப் புலனாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே விவகாரம்: CID அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினமும் (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்து விசேட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிறைக்கூடத்திற்குள் முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.எனினும் அரசியல் குழுக்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைக் குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நன்மையளிக்காது என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.பேராதனை போதனா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிவரும் சாட்சியங்களின் அடிப்படையில் சில நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மேலதிக விசாரணைகளுக்காக அவர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்படுகின்றன.இந்த விபரங்கள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், அவ்வப்போது பி அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்கிறது. அதன் அடிப்படையிலேயே சுரேஷ் சலே தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டுமாயின், காவலில் உள்ள சுரேஷ் சலே தமக்குத் தெரிந்த தகவல்களை விரைவாக வழங்க வேண்டும்.விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவர் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கான வழியாகும். தவறு செய்திருந்தால் மட்டுமே தகவல்களை மறைக்க வேண்டிய தேவை ஏற்படும். குற்றமற்றவர் என்றால் அச்சப்படாமல் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஊட்டச்சத்து நிலைமையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, அவரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முடியும்.தடுப்புக் காவல் உத்தரவில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் சில உள்ளன. அவை அனைத்தும் சலேயிற்கு வழங்கப்படுகின்றன.அவர் மருத்துவ சிகிச்சை கோரியபோது அது வழங்கப்பட்டது; பல் மருத்துவ சிகிச்சை கோரியபோதும் அது வழங்கப்பட்டது. அவருக்கு சிறப்புச் சலுகைகளோ அல்லது புறக்கணிப்புகளோ காட்டப்படவில்லை, சாதாரண நடைமுறையே பின்பற்றப்படுகிறது.விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கும் அதிகாரி ஒருவரை நீக்குமாறு யாராவது கூறினால், அவ்வாறு குற்றம் சுமத்தும் நபரே குற்றவாளி என்பது அதிலிருந்து தெளிவாகப் புலனாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.