• May 10 2024

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டுப்பணி...! மக்கள் கடும் எதிர்ப்பு...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 10:20 am
image

Advertisement

யாழ்ப்பாணம் கீரிமலை  ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றையதினம்(15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் வருகை தந்த நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலி வடக்கு தெல்லிப்பழை  பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டுப்பணி. மக்கள் கடும் எதிர்ப்பு.samugammedia யாழ்ப்பாணம் கீரிமலை  ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றையதினம்(15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் வருகை தந்த நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வலி வடக்கு தெல்லிப்பழை  பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement