அவுஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி “பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக” மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சிட்னியில் இருந்து அதிகளவானோர் வெளியேறுவதும் வெளிநாடுகளுக்கு குடியெர்வதும் இதற்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
சிட்னியில் கடந்த 2016 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 30 முதல் 40 வயதுடையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளது.
மேலும் வீட்டு செலவுகளை கட்டுப்படுத்த முடியாதது இதற்கு காரணம் என நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வீட்டு வாடகையும், சொந்த வீடு வாங்க முடியாத அளவு விலை அதிகரிப்பும், இளைஞர்களை குடும்பத்துடன் வெளியேறச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிட்னியில் இருந்து வெளியேறும் தரப்பினரின் எண்ணிக்கையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு்ள்ளது.
இந்த நிலை சிட்னியின் அடுத்த தலைமுறையினரை பாரியளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக மாறி வரும் சிட்னி - வெளியான அதிர்ச்சி தகவல். அவுஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி “பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக” மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.சிட்னியில் இருந்து அதிகளவானோர் வெளியேறுவதும் வெளிநாடுகளுக்கு குடியெர்வதும் இதற்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.சிட்னியில் கடந்த 2016 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 30 முதல் 40 வயதுடையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளது.மேலும் வீட்டு செலவுகளை கட்டுப்படுத்த முடியாதது இதற்கு காரணம் என நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதிகரித்துள்ள வீட்டு வாடகையும், சொந்த வீடு வாங்க முடியாத அளவு விலை அதிகரிப்பும், இளைஞர்களை குடும்பத்துடன் வெளியேறச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிட்னியில் இருந்து வெளியேறும் தரப்பினரின் எண்ணிக்கையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு்ள்ளது.இந்த நிலை சிட்னியின் அடுத்த தலைமுறையினரை பாரியளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.