• Sep 08 2024

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து தமிழரசு தீர்மானம் எடுக்கவில்லை - சுமந்திரன் எம்.பி. மீண்டும் தெரிவிப்பு

Chithra / Jul 25th 2024, 9:16 am
image

Advertisement

 

தமிழர் தர்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை என  இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாங்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலிலே நிற்கின்ற பிரதான வேட்பாளர்களோடு நாங்கள் பேரம் பேசி அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே அவர்கள் சொல்லுகின்ற விடயங்களை  அவதானித்து யாருக்கு எங்கள் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற செய்தியை அதற்குப் பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம்.

அதன்படி பிரதான வேட்பாளர்களில் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவோடும்  அநுரகுமார திஸாநாயக்கவோடும் எங்கள் கட்சி அலுவலகத்திலே உத்தியோகபூர்வமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்.

அத்தோடு எங்களுடைய எதிர்பார்ப்புக்களை அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கின்றோம். அவர்களுடைய தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் என்னென்ன விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன, எவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி சொல்லுகின்றார்கள் என்பதை அவதானிப்போம்.

ஆனால், வேறு எவரும் இன்னமும் தங்களை வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கின்ற பட்சத்தில் அவர்களோடும் இதே மாதிரியான பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்துவோம். 

இதேவேளை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப்  பிற்போட முடியாது. 

நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. 

மேலும் விக்னேஸ்வரன் சொல்லுகின்ற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போறதில்லை. ஆனால், என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கின்றேன் என்று அவர் சொன்னமைக்கு என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணவர்கள் மூளையைத்தான் பாவித்துச் சிந்தித்துக் கூறுகின்றனர் என்று அவர் கண்டுபிடித்திருக்கின்ற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது. ஆனால், அவர் எதனைப் பாவித்துச் சிந்திக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. - என்றார்.


தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து தமிழரசு தீர்மானம் எடுக்கவில்லை - சுமந்திரன் எம்.பி. மீண்டும் தெரிவிப்பு  தமிழர் தர்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை என  இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.நாங்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலிலே நிற்கின்ற பிரதான வேட்பாளர்களோடு நாங்கள் பேரம் பேசி அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே அவர்கள் சொல்லுகின்ற விடயங்களை  அவதானித்து யாருக்கு எங்கள் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற செய்தியை அதற்குப் பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம்.அதன்படி பிரதான வேட்பாளர்களில் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவோடும்  அநுரகுமார திஸாநாயக்கவோடும் எங்கள் கட்சி அலுவலகத்திலே உத்தியோகபூர்வமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்.அத்தோடு எங்களுடைய எதிர்பார்ப்புக்களை அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கின்றோம். அவர்களுடைய தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் என்னென்ன விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன, எவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி சொல்லுகின்றார்கள் என்பதை அவதானிப்போம்.ஆனால், வேறு எவரும் இன்னமும் தங்களை வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கின்ற பட்சத்தில் அவர்களோடும் இதே மாதிரியான பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்துவோம். இதேவேளை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப்  பிற்போட முடியாது. நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. மேலும் விக்னேஸ்வரன் சொல்லுகின்ற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போறதில்லை. ஆனால், என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கின்றேன் என்று அவர் சொன்னமைக்கு என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணவர்கள் மூளையைத்தான் பாவித்துச் சிந்தித்துக் கூறுகின்றனர் என்று அவர் கண்டுபிடித்திருக்கின்ற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது. ஆனால், அவர் எதனைப் பாவித்துச் சிந்திக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement