• Sep 21 2024

பிரதான வேட்பாளர்களுடன் தமிழரசு தொடர்ந்து பேசும்- இன்று மத்திய குழுவில் முடிவு!

Tamil nila / Aug 18th 2024, 7:32 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுப்பது என இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தென்னிலங்கையின் பிரதான கட்சிகளோடு நடைபெறும் பேச்சுக்களின் விவரங்களைச் சுமந்திரன் எம்.பி. இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுக்கும்படியும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கருத்து நிலைகளை அறிந்து, அவர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியான பின்னர் மத்திய குழு மீண்டும் கூடி அவற்றை ஆராய்ந்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவது தொடர்பிலும், தேர்தல் விஞ்ஞாபனங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அவற்றையும் பரிசீலித்து ஒரு தீர்மானத்தை எடுப்பது குறித்தும் இன்றைய மத்திய குழுவில் யோசனை ஒன்றை சிறீதரன் எம்.பி. பிரேரிக்க அதனை மத்திய குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு சற்று நேரத்தில் சிறீதரன் எம்.பி. கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இன்றைய கூட்டத்தில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான கருத்து எதனையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான வேட்பாளர்களுடன் தமிழரசு தொடர்ந்து பேசும்- இன்று மத்திய குழுவில் முடிவு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுப்பது என இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது.தென்னிலங்கையின் பிரதான கட்சிகளோடு நடைபெறும் பேச்சுக்களின் விவரங்களைச் சுமந்திரன் எம்.பி. இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுக்கும்படியும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கருத்து நிலைகளை அறிந்து, அவர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியான பின்னர் மத்திய குழு மீண்டும் கூடி அவற்றை ஆராய்ந்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.தொடர்ந்து பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவது தொடர்பிலும், தேர்தல் விஞ்ஞாபனங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அவற்றையும் பரிசீலித்து ஒரு தீர்மானத்தை எடுப்பது குறித்தும் இன்றைய மத்திய குழுவில் யோசனை ஒன்றை சிறீதரன் எம்.பி. பிரேரிக்க அதனை மத்திய குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு சற்று நேரத்தில் சிறீதரன் எம்.பி. கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இன்றைய கூட்டத்தில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான கருத்து எதனையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement