• Nov 22 2024

தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் விரைவில்- அழைப்பு வருகின்ற போது முடிவு எடுக்கப் பொதுக் கட்டமைப்பு தீர்மானம்!

Tamil nila / Aug 26th 2024, 7:00 pm
image

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது, தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா? இல்லையா? என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடக்கு - கிழக்கில் தேர்தல் பிரசாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.



இதேவேளை, இன்று எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானங்கள் அனைத்தையும் தேர்தல் காலம் முடியும் வரையில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் விரைவில்- அழைப்பு வருகின்ற போது முடிவு எடுக்கப் பொதுக் கட்டமைப்பு தீர்மானம் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது, தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா இல்லையா என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடக்கு - கிழக்கில் தேர்தல் பிரசாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை, இன்று எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானங்கள் அனைத்தையும் தேர்தல் காலம் முடியும் வரையில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement