• Feb 07 2026

கிளிநொச்சியை வந்தடைந்த தமிழினப்படுகொலை நினைவு ஊர்தி..!

dileesiya / May 15th 2025, 12:46 pm
image

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று காலை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது.

குறித்த ஊர்தியானது இன்றையதினம் காலை கிளிநொச்சியை வந்தடைந்தது.

இந்நிலையில் பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த ஊர்தியை வரவேற்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குறித்த ஊர்தி பவனி வடக்கை சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

"தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் குறித்த வாகனத்தில்  காட்சி படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியை வந்தடைந்த தமிழினப்படுகொலை நினைவு ஊர்தி. தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று காலை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது.குறித்த ஊர்தியானது இன்றையதினம் காலை கிளிநொச்சியை வந்தடைந்தது.இந்நிலையில் பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த ஊர்தியை வரவேற்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.குறித்த ஊர்தி பவனி வடக்கை சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது."தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் குறித்த வாகனத்தில்  காட்சி படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement