• Jul 27 2024

புத்தளம் தூய தேசத்திற்கான இயக்கத்தினரால் தமிழ் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு...!

Sharmi / May 24th 2024, 1:09 pm
image

Advertisement

புத்தளம் தூய தேசத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் புத்தள மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் சேவையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மர்ஹும் தம்பி நெய்னா மரிக்கார் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றையதினம்(23) இடம்பெற்றது.

முன்னாள் பிரதி அமைச்சரும், புத்தளம் மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் புத்தள நகரபிதாவுமான மர்ஹும் கே.ஏ. பாயிஸின் 3ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் தூய தேசத்துக்கான இயக்கம் இளம் அரசியல்வாதியான இஷாம் மரைக்காரின் ஆலோசனையில் கற்பிட்டி பிரதேசத்தின் தூயதேசத்திற்கான இயக்கத்தின் அமைப்பாளரான ஹஸ்லான் ரஸாக் தலைமையில் இந்த நிகழ்வில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தள மாவட்டத்தில் தற்சமயம் ஊடகவியலாளராக தொலைக்காட்சி , அச்சுஊடகம் மற்றும் இணைய ஊடகம் ஆகியவற்றில் கடமையாற்றும் அனுபவமிக்க , இளம் ஊடகவியலாளர்கள் 10 பேர் தூய தேசத்திற்கான இயக்கத்தின் உறுப்பினர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், விருதினைப் பெற்றுக் கொண்ட அத்தனை ஊடகவியலாளர்களும் ஊடகம் தொடர்பாகவும், அவர்கள் கடந்து வந்த பாதை தொடர்பான அனுபவத்தினையும், எதிர்காலத்தில் எவ்வாறான செயற்திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தூய தேசத்திற்கான இயக்கத்தினரால் தமிழ் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு. புத்தளம் தூய தேசத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் புத்தள மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் சேவையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மர்ஹும் தம்பி நெய்னா மரிக்கார் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றையதினம்(23) இடம்பெற்றது.முன்னாள் பிரதி அமைச்சரும், புத்தளம் மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் புத்தள நகரபிதாவுமான மர்ஹும் கே.ஏ. பாயிஸின் 3ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் தூய தேசத்துக்கான இயக்கம் இளம் அரசியல்வாதியான இஷாம் மரைக்காரின் ஆலோசனையில் கற்பிட்டி பிரதேசத்தின் தூயதேசத்திற்கான இயக்கத்தின் அமைப்பாளரான ஹஸ்லான் ரஸாக் தலைமையில் இந்த நிகழ்வில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது புத்தள மாவட்டத்தில் தற்சமயம் ஊடகவியலாளராக தொலைக்காட்சி , அச்சுஊடகம் மற்றும் இணைய ஊடகம் ஆகியவற்றில் கடமையாற்றும் அனுபவமிக்க , இளம் ஊடகவியலாளர்கள் 10 பேர் தூய தேசத்திற்கான இயக்கத்தின் உறுப்பினர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மேலும், விருதினைப் பெற்றுக் கொண்ட அத்தனை ஊடகவியலாளர்களும் ஊடகம் தொடர்பாகவும், அவர்கள் கடந்து வந்த பாதை தொடர்பான அனுபவத்தினையும், எதிர்காலத்தில் எவ்வாறான செயற்திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement