• Nov 24 2024

தமிழர் பகுதியில் காலில் மிதிபடும் தமிழ்மொழி...!சமூக செயற்பாட்டாளர் ஆதங்கம்...!samugammedia

Sharmi / Dec 27th 2023, 10:50 pm
image

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியிலுள்ள வங்கியொன்றில் தமிழ் எழுத்துக்களை காலில் மிதிபடும் வகையில் நிலத்தில் எழுதியிருப்பது தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

தமிழ் மக்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும் தமிழ் மொழி அரச மற்றும் தனியார் வங்கிகளில்  மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றது. 

பாடப்புத்தகத்தை காலால் மிதிக்கக்கூடாது, எதேட்சையாக மிதித்தால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது நாம் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர்களும் எமது பெற்றோரும் போதித்த நல்லறிவு. இன்றும் நாம் அதையே செய்கின்றோம். 

ஆனால், தற்போது எமது மொழியும் எழுத்துக்களும் மதிப்பை இழக்கும் நிலைக்கு கொண்டுசெல்லப்படுவது கவலை அளிக்கிறது. அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணக் கொடுக்கல் வாங்களுக்கு சென்று வரிசையில் நிற்கும்போது கால் கூசுகின்றது. 

வரிசையாக நிற்கின்ற இடத்தில், நிலத்தில் காலில் மிதிபடக்கூடியதாக வாசகங்களை எழுதியிருக்கிக்கின்றனர்.

மொழிப் பற்றாளர்களும் இதைக் கண்டும் காணாமலும் இருக்கின்றோம். இது எமது எதிர்காலச் சந்ததிக்கு தவறான தகவலை வழங்கும். மொழி மீதான பற்றுதலைக் குறைக்கும். 

தமிழ் மொழியைப் போன்று ஏனைய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

எனவே, வங்கிகள் மற்றும் மக்கள் கூடும்  ஏனைய இடங்களிலும் எழுத்துக்களை காலில் மிதிபடும் வகையில் பதிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என அதில் பதிவிடப்பட்டுள்ளது.


தமிழர் பகுதியில் காலில் மிதிபடும் தமிழ்மொழி.சமூக செயற்பாட்டாளர் ஆதங்கம்.samugammedia யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியிலுள்ள வங்கியொன்றில் தமிழ் எழுத்துக்களை காலில் மிதிபடும் வகையில் நிலத்தில் எழுதியிருப்பது தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,தமிழ் மக்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும் தமிழ் மொழி அரச மற்றும் தனியார் வங்கிகளில்  மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றது. பாடப்புத்தகத்தை காலால் மிதிக்கக்கூடாது, எதேட்சையாக மிதித்தால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது நாம் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர்களும் எமது பெற்றோரும் போதித்த நல்லறிவு. இன்றும் நாம் அதையே செய்கின்றோம். ஆனால், தற்போது எமது மொழியும் எழுத்துக்களும் மதிப்பை இழக்கும் நிலைக்கு கொண்டுசெல்லப்படுவது கவலை அளிக்கிறது. அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணக் கொடுக்கல் வாங்களுக்கு சென்று வரிசையில் நிற்கும்போது கால் கூசுகின்றது. வரிசையாக நிற்கின்ற இடத்தில், நிலத்தில் காலில் மிதிபடக்கூடியதாக வாசகங்களை எழுதியிருக்கிக்கின்றனர். மொழிப் பற்றாளர்களும் இதைக் கண்டும் காணாமலும் இருக்கின்றோம். இது எமது எதிர்காலச் சந்ததிக்கு தவறான தகவலை வழங்கும். மொழி மீதான பற்றுதலைக் குறைக்கும். தமிழ் மொழியைப் போன்று ஏனைய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எனவே, வங்கிகள் மற்றும் மக்கள் கூடும்  ஏனைய இடங்களிலும் எழுத்துக்களை காலில் மிதிபடும் வகையில் பதிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement