வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று(26) இடம்பெற்றது.
செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிப் பிரச்சனைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகை தந்த கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா, மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த தமிழ் எம்.பிகள். வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று(26) இடம்பெற்றது.செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிப் பிரச்சனைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகை தந்த கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா, மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இதேவேளை, குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.