• Dec 03 2024

இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை...! சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி...!

Sharmi / Feb 9th 2024, 10:10 am
image

இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் குறித்த மாநாட்டை நடாத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 15ம் நாள் இந்தியா தமிழ்நாட்டில் 'மலையகம் 200' மாநாடு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த மாநாட்டில் கல்விமான்கள்,வழக்கறிஞர்கள், வல்லுனர்கள் , பேராசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பற்றும் ஒழுங்குடன் இடம்பெற ஏற்பாடு செய்த மாநாட்டை தமிழக அரசும் அதன் காவல் துறையும் தடைசெய்திருந்தது.

இதன்பின்னர்இ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதமருடன் தமிழ் நாட்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் அரசவை உறுப்பினர்கள்இ ஏனைய அரசவை உறுப்பினர்கள் கலந்தாலோசித்து இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதென முடிவெடுக்கப்பட்டு நாடுகடந்த அரசாங்கத்தின் தமிழக அரசவை உறுப்பினர் வழக்கறிஞ்ஞர் பாவேந்தனால்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் அனைத்து வாதங்களையும் நீதிபதி நிராகரித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாநாட்டை நடாத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய குறித்த மாநாடு இன்றையதினம்(09)மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் றிப்போட்ரஸ் கில்ட் பகுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை. சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி. இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் குறித்த மாநாட்டை நடாத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 15ம் நாள் இந்தியா தமிழ்நாட்டில் 'மலையகம் 200' மாநாடு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த மாநாட்டில் கல்விமான்கள்,வழக்கறிஞர்கள், வல்லுனர்கள் , பேராசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பற்றும் ஒழுங்குடன் இடம்பெற ஏற்பாடு செய்த மாநாட்டை தமிழக அரசும் அதன் காவல் துறையும் தடைசெய்திருந்தது.இதன்பின்னர்இ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதமருடன் தமிழ் நாட்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் அரசவை உறுப்பினர்கள்இ ஏனைய அரசவை உறுப்பினர்கள் கலந்தாலோசித்து இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதென முடிவெடுக்கப்பட்டு நாடுகடந்த அரசாங்கத்தின் தமிழக அரசவை உறுப்பினர் வழக்கறிஞ்ஞர் பாவேந்தனால்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் அனைத்து வாதங்களையும் நீதிபதி நிராகரித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாநாட்டை நடாத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய குறித்த மாநாடு இன்றையதினம்(09)மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் றிப்போட்ரஸ் கில்ட் பகுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement