• Apr 18 2026

பேருந்தின் மின்னணு வழித்தடப் பலகையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’!

shanu / Apr 6th 2026, 2:26 pm
image

திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்றின் மின்னணு வழித்தடப் பலகையில் விஜய் கட்சியின் பெயரான ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பதிவிடப்பட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 


“யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையை இயக்கும் மென்பொருள் அமைப்பை ஹேக் செய்து கட்சியின் பெயரை பதிவிட்டுள்ளனர்.


இச்சம்பவம் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. 


இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அரசு போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் மின்னணு வழித்தடப் பலகையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்றின் மின்னணு வழித்தடப் பலகையில் விஜய் கட்சியின் பெயரான ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பதிவிடப்பட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. “யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையை இயக்கும் மென்பொருள் அமைப்பை ஹேக் செய்து கட்சியின் பெயரை பதிவிட்டுள்ளனர்.இச்சம்பவம் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அரசு போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement