• Jan 16 2025

திருமலையில் கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு..!

Sharmi / Jan 14th 2025, 3:13 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று காலை 10 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது கட்சிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றிய பார்வை, மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாநாடு உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதோடு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்து வரும் புதிய அரசமைப்பு விடயத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கையாளுதல் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் வகிபாகம் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருமலையில் கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று காலை 10 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.இந்தக் கூட்டத்தின்போது கட்சிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றிய பார்வை, மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாநாடு உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதோடு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்து வரும் புதிய அரசமைப்பு விடயத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கையாளுதல் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் வகிபாகம் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement