• Apr 09 2025

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி வெருகல் வருகை..!!

Tamil nila / May 12th 2024, 7:58 pm
image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் -ஈச்சிலம்பற்று சிறி செண்பக நாச்சியம்மன் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.


முதலில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாஸன் அவர்களின் அழைப்பின் பேரில் இவ் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.


இதன் போது வெருகல் பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் ,கட்சியின் செயற்பாடுகள், மக்களின் கருத்துக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருத்தாடல்கள் இடம் பெற்றன.  

இச்சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் சுந்தரலிங்கம், உதவி தவிசாளர், ததிழ் தேசிய கூட்டமைப்பின் வெருகல் பிரதேச முக்கியஷ்தர்கள்,கோயில் நிருவாகத்தினர்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.





தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி வெருகல் வருகை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் -ஈச்சிலம்பற்று சிறி செண்பக நாச்சியம்மன் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.முதலில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாஸன் அவர்களின் அழைப்பின் பேரில் இவ் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.இதன் போது வெருகல் பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் ,கட்சியின் செயற்பாடுகள், மக்களின் கருத்துக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருத்தாடல்கள் இடம் பெற்றன.  இச்சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் சுந்தரலிங்கம், உதவி தவிசாளர், ததிழ் தேசிய கூட்டமைப்பின் வெருகல் பிரதேச முக்கியஷ்தர்கள்,கோயில் நிருவாகத்தினர்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now