பட்டிலந்த வதைமுகாம் விவகாரத்தை தூசு தட்டும் இன்றைய அநுர தலைமையிலான அரசு, அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நட்டு மக்கள் மறந்துவிடவில்லை என சுட்டிக்காட்டிய சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தன், யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உச்ச பேசுபொருளாக இருந்துவரும் குறித்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் வஜிர அபேவர்த்தன அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப அது ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் திருஞானசம்பந்தன்,
சோசலிசத்துக்காக போராடும் வேலைத்திட்டங்களுக்கு பிரதேச ரீதியில் வலுச் சேர்க்கும் வகையில் தான் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றோம் .
அதேநேரம் அனுரவின் கட்சி ஒரு பாசிசவாதம் கொண்ட கோடூரமான கட்சி. இவர்களும் இராணுவத்தை பாதுகாக்கவே முற்படுகின்றனர்.
இதனால் தமிழ் மக்கள் இவர்களிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுர அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது-திருஞானசம்பந்தன் சுட்டிக்காட்டு. பட்டிலந்த வதைமுகாம் விவகாரத்தை தூசு தட்டும் இன்றைய அநுர தலைமையிலான அரசு, அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நட்டு மக்கள் மறந்துவிடவில்லை என சுட்டிக்காட்டிய சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தன், யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் உச்ச பேசுபொருளாக இருந்துவரும் குறித்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் வஜிர அபேவர்த்தன அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப அது ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தது என்று கூறியுள்ளார்.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் திருஞானசம்பந்தன், சோசலிசத்துக்காக போராடும் வேலைத்திட்டங்களுக்கு பிரதேச ரீதியில் வலுச் சேர்க்கும் வகையில் தான் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றோம் .அதேநேரம் அனுரவின் கட்சி ஒரு பாசிசவாதம் கொண்ட கோடூரமான கட்சி. இவர்களும் இராணுவத்தை பாதுகாக்கவே முற்படுகின்றனர்.இதனால் தமிழ் மக்கள் இவர்களிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.