தமிழர் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை களமிறக்குங்கள் என்று கூறுபவர்கள் மட்டில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .
இன்று யாழ்பாணத்தில்இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியாக தமிழர் ஒருவரை வேட்பாளராக நியமிக்கும் விடயம் தற்போது பேசுபொருளாக உள்ளது. 2020க்கு பிறகு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவை தமிழரசுக்கட்சி சந்தித்த பிறகு, 2025 வரை கோட்டபாய தான் ஜனாதிபதியாக இருப்பார் என்ற தோற்றப்பாடு இருந்தது. அப்போது நான் ஒரு கருத்தை கூறி இருந்தேன் அது யாதெனில், தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்க முடியாத சந்தர்ப்பத்தில் தமிழர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவோம் என்று கூறினேன். அந்த நேரத்தில் சிலர் ஏற்றுக்கொண்டனர். அதுபற்றி பின்பு யோசிக்கலாம் என்று சிலர் கூறினர்.
தற்போதைய சூழலில் இவ்விடயத்தை ஒரு செய்தியாக ஊடகங்கள் வெளியிடுகின்றன. தொலைபேசியூடாகவும் இது பற்றி கேட்கின்றனர். இதனை தெற்கில் உள்ள ஊடகங்களும் பிரபல்யமாக்குகின்றன. இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றி பேசலாம்.
தமிழர் ஒருவரை தேர்தலில் களமிறக்குவது எமக்கான ஒரு துருப்புச்சீட்டு. இதனை நாங்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதை ஒரு முறை தான் செய்யலாம். இது தொடர்பாக அண்மைக்காலங்களில் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தான் இக்கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றாக கூறினால் ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்பதாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறினார்கள், அத்தோடு அவருக்கும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தொடர்பும் இருக்கிறது. அதே நேரம் வரவு செலவு திட்டத்தில் நடுநிலையாக வாக்களித்தார். தற்போது அவர் தமிழ் மக்களுக்கு ஆதரவு என்றும் ஜனாதிபதிக்கு எதிரானவர் என்றும் நாடகமாடுகிறார் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த கட்சி சார்பாக ரணில் களமிறங்கினால் தமிழ் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்காது. ஆகவே தந்திரமாக செயற்படும் ரணில் தமிழர் ஒருவரை தேர்தலில் களமிறக்கி அவர்களின் வாக்குகளை எவருக்கும் கிடைக்க விடாது செய்வதே அவர் திட்டமாகும் என்பதே என்னுடைய சந்தேகமாக இருக்கிறது
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது. இச்சூழலில் தமிழர் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை களமிறக்குங்கள் என்று கூறுபவர்கள் மட்டில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உள்நோக்கங்களை பார்க்க வேண்டும். நாங்கள் அரசியலில் சேவையாற்றுவது தனிப்பட்ட நலனுக்காக அல்ல மக்களின் நலனுக்காகவே நாங்கள் சேவையாற்றுகிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்கள் தமிழர்களே - சாணக்கியன்.samugammedia தமிழர் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை களமிறக்குங்கள் என்று கூறுபவர்கள் மட்டில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .இன்று யாழ்பாணத்தில்இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதியாக தமிழர் ஒருவரை வேட்பாளராக நியமிக்கும் விடயம் தற்போது பேசுபொருளாக உள்ளது. 2020க்கு பிறகு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவை தமிழரசுக்கட்சி சந்தித்த பிறகு, 2025 வரை கோட்டபாய தான் ஜனாதிபதியாக இருப்பார் என்ற தோற்றப்பாடு இருந்தது. அப்போது நான் ஒரு கருத்தை கூறி இருந்தேன் அது யாதெனில், தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்க முடியாத சந்தர்ப்பத்தில் தமிழர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவோம் என்று கூறினேன். அந்த நேரத்தில் சிலர் ஏற்றுக்கொண்டனர். அதுபற்றி பின்பு யோசிக்கலாம் என்று சிலர் கூறினர்.தற்போதைய சூழலில் இவ்விடயத்தை ஒரு செய்தியாக ஊடகங்கள் வெளியிடுகின்றன. தொலைபேசியூடாகவும் இது பற்றி கேட்கின்றனர். இதனை தெற்கில் உள்ள ஊடகங்களும் பிரபல்யமாக்குகின்றன. இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றி பேசலாம். தமிழர் ஒருவரை தேர்தலில் களமிறக்குவது எமக்கான ஒரு துருப்புச்சீட்டு. இதனை நாங்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதை ஒரு முறை தான் செய்யலாம். இது தொடர்பாக அண்மைக்காலங்களில் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தான் இக்கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றாக கூறினால் ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்பதாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறினார்கள், அத்தோடு அவருக்கும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தொடர்பும் இருக்கிறது. அதே நேரம் வரவு செலவு திட்டத்தில் நடுநிலையாக வாக்களித்தார். தற்போது அவர் தமிழ் மக்களுக்கு ஆதரவு என்றும் ஜனாதிபதிக்கு எதிரானவர் என்றும் நாடகமாடுகிறார் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த கட்சி சார்பாக ரணில் களமிறங்கினால் தமிழ் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்காது. ஆகவே தந்திரமாக செயற்படும் ரணில் தமிழர் ஒருவரை தேர்தலில் களமிறக்கி அவர்களின் வாக்குகளை எவருக்கும் கிடைக்க விடாது செய்வதே அவர் திட்டமாகும் என்பதே என்னுடைய சந்தேகமாக இருக்கிறது இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் தான் ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது. இச்சூழலில் தமிழர் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை களமிறக்குங்கள் என்று கூறுபவர்கள் மட்டில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உள்நோக்கங்களை பார்க்க வேண்டும். நாங்கள் அரசியலில் சேவையாற்றுவது தனிப்பட்ட நலனுக்காக அல்ல மக்களின் நலனுக்காகவே நாங்கள் சேவையாற்றுகிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.