• Dec 29 2024

திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் தமிழர்கள்;அநுர ஆட்சியிலும் கொடுமை- ஜீவராசா காட்டம்..!

Sharmi / Dec 28th 2024, 3:44 pm
image

தமிழர்களாக பிறந்ததால் நான் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் திறந்த வெளிச் சிறைக்குள்ளேயே இன்றும் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  ஒன்பதாவது முறையாக கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு கட்டளை தரப்பட்டது.

26 ஆம்  திகதி 27 என்னை கொழும்புக்கு வருமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எனது உடல் நிலை சீரின்மையால் நான் அங்கு செல்லவில்லை. 

உண்மையாகவே என்னை போன்று எத்தனையோ பேர்களுக்கு கொழும்புக்கு அழைப்பாணை வருகிறது.

ஒரு நபர் கொழும்பு சென்று மீண்டும் திரும்ப மொத்தத்தில் 25 ஆயிரம் ரூபாய் தேவை.

ஆகவே இதை கருத்தில் கொண்டு வந்து எமது பொலிஸ்மா அதிபர் ஒவ்வொரு விசாரணைகளையும் எமது மாவட்டத்திலே செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான அழைப்பு கட்டளைகளால் புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் இந்த நாட்டுக்கு வருவது குறைந்து வருகிறது.

உண்மையாகவே இலங்கை தீவு ஒரு சுற்றுலா துறையை நம்பி இருக்கிறது.  தற்பொழுது  நடைபெறுகின்ற இப்படியான பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் போது இந்த நாட்டுக்கு சுற்றுலா துறையினர் வருவது குறைந்து விடும்.

பொதுவாக ஒரு முகநூலில் தேசிய தலைவரின் படம் வந்தால் அவர்களுக்கு விசாரணை. ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் ஒரு மூடிய சிறைச்சாலையில் தான் வாழ்கிறார்கள். இப்பொழுது ஜனாதிபதி ஆட்சிக்கு வர முதல் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்த ஒரு நபர். இன்று அந்த ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டு அவர் பழைய முறைகளை தான் அவரும் செய்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான தமிழ் இளைஞர்கள் விசாரணை என்ற போர்வையில் பயமுறுத்தப்படுகிறார்கள்.

ஆகவே இந்த நிலை தொடருமாக இருந்தால் இளைஞர்கள் எல்லோரும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் எமது நாட்டில் கதைப்பதற்கு மட்டும்தான் போன் பாவிக்கலாம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை அதை முதலில் இந்த ஜனாதிபதி செய்தால் நன்றாக இருக்கும்.

இது ஒரு ஜனநாயக நாடு கிடையாது ஒரு ஜனநாயகமாக பேச முடியாது ஒரு ஜனநாயகமாக ஒரு பதிவிட முடியாது.

அப்படித்தான் நமது மக்கள் எமது இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வினை தர வேண்டும் பொலிஸ்மா அதிபருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் நான் விரயமாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.


திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் தமிழர்கள்;அநுர ஆட்சியிலும் கொடுமை- ஜீவராசா காட்டம். தமிழர்களாக பிறந்ததால் நான் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் திறந்த வெளிச் சிறைக்குள்ளேயே இன்றும் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  ஒன்பதாவது முறையாக கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு கட்டளை தரப்பட்டது. 26 ஆம்  திகதி 27 என்னை கொழும்புக்கு வருமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் எனது உடல் நிலை சீரின்மையால் நான் அங்கு செல்லவில்லை.  உண்மையாகவே என்னை போன்று எத்தனையோ பேர்களுக்கு கொழும்புக்கு அழைப்பாணை வருகிறது. ஒரு நபர் கொழும்பு சென்று மீண்டும் திரும்ப மொத்தத்தில் 25 ஆயிரம் ரூபாய் தேவை. ஆகவே இதை கருத்தில் கொண்டு வந்து எமது பொலிஸ்மா அதிபர் ஒவ்வொரு விசாரணைகளையும் எமது மாவட்டத்திலே செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படியான அழைப்பு கட்டளைகளால் புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் இந்த நாட்டுக்கு வருவது குறைந்து வருகிறது. உண்மையாகவே இலங்கை தீவு ஒரு சுற்றுலா துறையை நம்பி இருக்கிறது.  தற்பொழுது  நடைபெறுகின்ற இப்படியான பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் போது இந்த நாட்டுக்கு சுற்றுலா துறையினர் வருவது குறைந்து விடும். பொதுவாக ஒரு முகநூலில் தேசிய தலைவரின் படம் வந்தால் அவர்களுக்கு விசாரணை. ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் ஒரு மூடிய சிறைச்சாலையில் தான் வாழ்கிறார்கள். இப்பொழுது ஜனாதிபதி ஆட்சிக்கு வர முதல் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்த ஒரு நபர். இன்று அந்த ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டு அவர் பழைய முறைகளை தான் அவரும் செய்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான தமிழ் இளைஞர்கள் விசாரணை என்ற போர்வையில் பயமுறுத்தப்படுகிறார்கள். ஆகவே இந்த நிலை தொடருமாக இருந்தால் இளைஞர்கள் எல்லோரும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் எமது நாட்டில் கதைப்பதற்கு மட்டும்தான் போன் பாவிக்கலாம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை அதை முதலில் இந்த ஜனாதிபதி செய்தால் நன்றாக இருக்கும். இது ஒரு ஜனநாயக நாடு கிடையாது ஒரு ஜனநாயகமாக பேச முடியாது ஒரு ஜனநாயகமாக ஒரு பதிவிட முடியாது. அப்படித்தான் நமது மக்கள் எமது இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வினை தர வேண்டும் பொலிஸ்மா அதிபருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் நான் விரயமாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement