காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கொஸ்கொட தாரக்க’ என்பவரின் உறவினர் ஒருவரை இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாகவும்,
எனினும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கி இயங்காததால் உயிர் தப்பிய இலக்கு - கொஸ்கொடயில் அதிகாலை பரபரப்பு காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கொஸ்கொட தாரக்க’ என்பவரின் உறவினர் ஒருவரை இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாகவும், எனினும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.