• Apr 03 2025

பாடசாலை நவராத்திரி பூஜையில் பங்கேற்ற ஆசிரியருக்கு ஏற்பட்ட துயரம்

Chithra / Oct 13th 2024, 7:35 am
image


நவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றிய 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பங்கேற்று கொண்டிருந்த போது, ​​திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசிரியர் தரையில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களின் உதவியுடன் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில்,  ஆசிரியரின் திடீர் உயிரிழப்பு பாடசாலை சமுகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பாடசாலை நவராத்திரி பூஜையில் பங்கேற்ற ஆசிரியருக்கு ஏற்பட்ட துயரம் நவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றிய 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பங்கேற்று கொண்டிருந்த போது, ​​திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசிரியர் தரையில் விழுந்துள்ளார்.இதனையடுத்து பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களின் உதவியுடன் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில்,  ஆசிரியரின் திடீர் உயிரிழப்பு பாடசாலை சமுகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement