கல்வித்துறையின் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தின் மூலம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரி பாடாசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு 7 இலட்சத்து 50 ஆயிரம் பிள்ளைகளுக்கு பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.
இம்மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரையில் பதிவுசெய்யப்பட்ட வியாபார நிலையங்களில் இந்த வவுச்சர் ஊடாக பாதணிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த வருடத்தில் இந்த 7 இலட்சத்து ஐம்பதாயிரத்தை 10 இலட்சமாக மாற்றவும் எதிர்பார்க்கின்றோம்.
ஆசிரியர் சம்பள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதையும் நான் அவதானித்தேன்.
தற்போது அனைவருக்கும் 10 000 ரூபா கிடைக்கின்றது. இவர்கள் கோரும் தொகை வேறு. நாங்கள் கோரிக்கை முன்வைத்தோம் ஆனாலும் அதற்கான போதியளவு நிதி இல்லை.
சில நேரங்களில் அடுத்த வருடத்தில் அதனை நடைமுறைப்படுத்த இயலும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை - கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு samugammedia கல்வித்துறையின் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தின் மூலம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரி பாடாசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,2200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு 7 இலட்சத்து 50 ஆயிரம் பிள்ளைகளுக்கு பாடசாலை பாதணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.இம்மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரையில் பதிவுசெய்யப்பட்ட வியாபார நிலையங்களில் இந்த வவுச்சர் ஊடாக பாதணிகளை பெற்றுக்கொள்ள முடியும்.அடுத்த வருடத்தில் இந்த 7 இலட்சத்து ஐம்பதாயிரத்தை 10 இலட்சமாக மாற்றவும் எதிர்பார்க்கின்றோம்.ஆசிரியர் சம்பள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதையும் நான் அவதானித்தேன்.தற்போது அனைவருக்கும் 10 000 ரூபா கிடைக்கின்றது. இவர்கள் கோரும் தொகை வேறு. நாங்கள் கோரிக்கை முன்வைத்தோம் ஆனாலும் அதற்கான போதியளவு நிதி இல்லை.சில நேரங்களில் அடுத்த வருடத்தில் அதனை நடைமுறைப்படுத்த இயலும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.