உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்டு இளம்பெண்ணொருவர் தாயின் நகையைத் திருடி விற்ற சம்சபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இளம்பெண்கள்கள் பொதுவாக தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அதற்காக காது, உதடு அணிகலன்கள் உற்பட அழகுசாதன பொருட்கள் வாங்குவதற்கு அதிக ஆசைப்படுவார்கள். இவ்வாறு உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண் ஒருவர் அதற்காக தனது தாயின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி ரூ.700 இற்கு விற்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
அங்குள்ள வாங் என்ற பெண் தனது வீட்டில் இருந்த 1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி) மதிப்பிலான வளையல், நெக்லஸ் மற்றும் ரத்தின கற்கள் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தார்.கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது வாங்கின் மகள் லீ தான் அந்த நகைகளை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் லீயை விசாரித்தனர்.
அவரிடம் விசாரித்த போது அவர் குறிப்பிட்ட பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.
உதடு அணிகலன்கள் வாங்க பணம் தேவைப்பட்டதால் வீட்டில் இருந்த நகைகளை கவரிங் என நினைத்து எடுத்து சென்று அவற்றை ரூ.700 இற்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன் வாங்கியதாக கூறி உள்ளார்.
பின்னர் பொலிஸார் அவர் விற்பனை செய்த கடைக்கு சென்று நகைகளை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்டு தாயின் நகையைத் திருடி விற்ற இளம்பெண் உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்டு இளம்பெண்ணொருவர் தாயின் நகையைத் திருடி விற்ற சம்சபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது இளம்பெண்கள்கள் பொதுவாக தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அதற்காக காது, உதடு அணிகலன்கள் உற்பட அழகுசாதன பொருட்கள் வாங்குவதற்கு அதிக ஆசைப்படுவார்கள். இவ்வாறு உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண் ஒருவர் அதற்காக தனது தாயின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி ரூ.700 இற்கு விற்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.அங்குள்ள வாங் என்ற பெண் தனது வீட்டில் இருந்த 1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி) மதிப்பிலான வளையல், நெக்லஸ் மற்றும் ரத்தின கற்கள் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தார்.கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது வாங்கின் மகள் லீ தான் அந்த நகைகளை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் லீயை விசாரித்தனர்.அவரிடம் விசாரித்த போது அவர் குறிப்பிட்ட பதில் ஆச்சரியத்தை ஊட்டியது. உதடு அணிகலன்கள் வாங்க பணம் தேவைப்பட்டதால் வீட்டில் இருந்த நகைகளை கவரிங் என நினைத்து எடுத்து சென்று அவற்றை ரூ.700 இற்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன் வாங்கியதாக கூறி உள்ளார். பின்னர் பொலிஸார் அவர் விற்பனை செய்த கடைக்கு சென்று நகைகளை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.