• Jan 08 2025

பானத்தை குடித்த இளைஞன் பலி..! புத்தாண்டு விருந்தில் நடந்த சோகம்

Chithra / Jan 1st 2025, 3:02 pm
image


 

புத்தாண்டைக் கொண்டாடும் விருந்தில் கலந்துகொண்ட இரு இளைஞர்கள் அருந்திய பானத்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இளைஞர் ஒருவர்  இன்றுஉயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் பலருடன் நேற்று (31) புத்தாண்டின் விடியலைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், நண்பர்கள் சிலரின் அழைப்பின் பேரில், பொல்கசோவிட்ட ஹல்பிட்ட பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்று விருந்தொன்றில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு இளைஞர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய சில பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், 

அவர்களது நண்பர்களால் சிகிச்சைக்காக வத்தரா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவர் இன்று (01) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பானத்தை குடித்த இளைஞன் பலி. புத்தாண்டு விருந்தில் நடந்த சோகம்  புத்தாண்டைக் கொண்டாடும் விருந்தில் கலந்துகொண்ட இரு இளைஞர்கள் அருந்திய பானத்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இளைஞர் ஒருவர்  இன்றுஉயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த இளைஞன் பலருடன் நேற்று (31) புத்தாண்டின் விடியலைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், நண்பர்கள் சிலரின் அழைப்பின் பேரில், பொல்கசோவிட்ட ஹல்பிட்ட பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்று விருந்தொன்றில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இரண்டு இளைஞர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய சில பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், அவர்களது நண்பர்களால் சிகிச்சைக்காக வத்தரா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவர் இன்று (01) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement