கேகாலை - தெலியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது பிறந்தநாளை தனது நண்பர்கள் குழுவுடன் கொண்டாடிக்கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
கேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட அஷான் பிரபோத என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நண்பர்கள் குழு நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீண்ட நேரமாக மது அருந்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், குழுவினர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, அஷான் நீரில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன குறித்த இளைஞரின் சடலம் நேற்று (18) பிற்பகல் நீர்வீழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு தொழிலுக்காக செல்ல இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த துயரம் - வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணம் கேகாலை - தெலியெல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் தனது பிறந்தநாளை தனது நண்பர்கள் குழுவுடன் கொண்டாடிக்கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.கேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட அஷான் பிரபோத என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த நண்பர்கள் குழு நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீண்ட நேரமாக மது அருந்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பின்னர், குழுவினர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, அஷான் நீரில் மூழ்கியுள்ளார்.இந்நிலையில் காணாமல் போன குறித்த இளைஞரின் சடலம் நேற்று (18) பிற்பகல் நீர்வீழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த இளைஞன் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு தொழிலுக்காக செல்ல இருந்தமை குறிப்பிடத்தக்கது.