மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி. எஸ் விஜேசிங்க மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
பிலியந்தலையிலிருந்து கட்டுபெத்த நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியின் வலது புறமாக திரும்ப முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கட்டுபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஆவார்.
இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளுடன் மோதிய முச்சக்கரவண்டி - இளைஞன் பலி மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி. எஸ் விஜேசிங்க மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளது.பிலியந்தலையிலிருந்து கட்டுபெத்த நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியின் வலது புறமாக திரும்ப முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கட்டுபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஆவார். இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.