• Jan 20 2025

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி நாசம் - கிளிநொச்சி விவசாயிகள் கவலை

Chithra / Jan 19th 2025, 3:24 pm
image


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் ஆகிய நாங்களும் அரிசியை கடைகளிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி - கந்தாவளை - பெரியகுளம் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்

தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி தற்பொழுது முளைக்க ஆரம்பித்துள்ளது.

விதைத்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாது.

கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல் நிலங்களை பார்வையிட்ட விவசாய காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகள் உரிய வகையில் தமக்கான இழப்பீட்டை வழங்கவில்லை.

ஒரு சிலருக்கு மாத்திரமே அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வைப்பிடப்பட்டுள்ளது.  ஏனையவர்களுக்கு எந்தவித பதிலையும் வழங்காதுள்ளனர்.

இம்முறையும் பாரியளவிலான அழிவு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆகிய நாங்களும் தற்பொழுது அரிசியை கடையிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறையாவது விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனம் உரிய வகையில் பார்வையிட்டு எமக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான கொடுப்பவை வழங்க வேண்டும்.

இல்லாவிடில் தொடர்ச்சியாக நெற்செய்கை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுவார்கள் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி நாசம் - கிளிநொச்சி விவசாயிகள் கவலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் ஆகிய நாங்களும் அரிசியை கடைகளிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி - கந்தாவளை - பெரியகுளம் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி தற்பொழுது முளைக்க ஆரம்பித்துள்ளது.விதைத்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாது.கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல் நிலங்களை பார்வையிட்ட விவசாய காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகள் உரிய வகையில் தமக்கான இழப்பீட்டை வழங்கவில்லை.ஒரு சிலருக்கு மாத்திரமே அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வைப்பிடப்பட்டுள்ளது.  ஏனையவர்களுக்கு எந்தவித பதிலையும் வழங்காதுள்ளனர்.இம்முறையும் பாரியளவிலான அழிவு ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் ஆகிய நாங்களும் தற்பொழுது அரிசியை கடையிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இம்முறையாவது விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனம் உரிய வகையில் பார்வையிட்டு எமக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான கொடுப்பவை வழங்க வேண்டும்.இல்லாவிடில் தொடர்ச்சியாக நெற்செய்கை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுவார்கள் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement