• Jul 28 2026

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்தபெண்ணால் பதற்றம் - உயிரைக் காத்த இரு இளைஞர்கள்

Chithra / Jul 28th 2026, 11:49 am
image


 

மட்டக்களப்பு – ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.


முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர், தொலைபேசியில் உரையாட வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியிடம் கோரியுள்ளார்.


இதன்படி சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்திய நிலையில், குறித்த பெண் திடீரென அருகிலிருந்த ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார்.


இதனைக் அவதானித்த இரு இளைஞர்கள், ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றை எடுத்துச் சென்று, ஆற்றில் தத்தளித்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்தபெண்ணால் பதற்றம் - உயிரைக் காத்த இரு இளைஞர்கள்  மட்டக்களப்பு – ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர், தொலைபேசியில் உரையாட வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியிடம் கோரியுள்ளார்.இதன்படி சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்திய நிலையில், குறித்த பெண் திடீரென அருகிலிருந்த ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார்.இதனைக் அவதானித்த இரு இளைஞர்கள், ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றை எடுத்துச் சென்று, ஆற்றில் தத்தளித்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement