• Aug 13 2026

விமான நிலையத்தில் பதற்றம்; தரையில் விழுந்து மோதிக்கொண்ட இஸ்ரேலியர் - அமெரிக்கர்!

Chithra / Aug 9th 2026, 3:56 pm
image


பிலிப்பைன்ஸின் மணிலா விமான நிலையத்தில் இஸ்ரேலியர் ஒருவரும் அமெரிக்கர் ஒருவரும்  மோதிக்கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.


அமெரிக்கர் ஒருவர் தனக்கு எதிராக யூத விரோதக் கருத்துகளை தெரிவித்ததாக இஸ்ரேலியர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட காணொளியில், இருவரும் தரையில் விழுந்து ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வது பதிவாகியுள்ளது. பின்னர் அங்கிருந்த ஒருவர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்துள்ளனர்.


காணொளியில் பேசிய இஸ்ரேலியர், அமெரிக்கர் தன்னை “குழந்தைகளைக் கொன்றவர்” எனக் கூறியதுடன், ஹிட்லர் தனது நடவடிக்கையை முழுமையாக முடித்திருக்காதது வருத்தமளிப்பதாகவும் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தக் கருத்துகளே தன்னை ஆத்திரமடையச் செய்து, பதிலடி நடவடிக்கையில் ஈடுபட வைத்ததாக இஸ்ரேலியர் தெரிவித்துள்ளார்.


எனினும், மோதலுக்குப் பின்னர் அமெரிக்கர், “நீங்கள் எனது கருத்தை நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் என்னைத் தாக்கினீர்கள்; நீங்கள் சிறைக்குச் செல்லப் போகிறீர்கள்” எனக் கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விமான நிலையத்தில் பதற்றம்; தரையில் விழுந்து மோதிக்கொண்ட இஸ்ரேலியர் - அமெரிக்கர் பிலிப்பைன்ஸின் மணிலா விமான நிலையத்தில் இஸ்ரேலியர் ஒருவரும் அமெரிக்கர் ஒருவரும்  மோதிக்கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.அமெரிக்கர் ஒருவர் தனக்கு எதிராக யூத விரோதக் கருத்துகளை தெரிவித்ததாக இஸ்ரேலியர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட காணொளியில், இருவரும் தரையில் விழுந்து ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வது பதிவாகியுள்ளது. பின்னர் அங்கிருந்த ஒருவர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்துள்ளனர்.காணொளியில் பேசிய இஸ்ரேலியர், அமெரிக்கர் தன்னை “குழந்தைகளைக் கொன்றவர்” எனக் கூறியதுடன், ஹிட்லர் தனது நடவடிக்கையை முழுமையாக முடித்திருக்காதது வருத்தமளிப்பதாகவும் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்தக் கருத்துகளே தன்னை ஆத்திரமடையச் செய்து, பதிலடி நடவடிக்கையில் ஈடுபட வைத்ததாக இஸ்ரேலியர் தெரிவித்துள்ளார்.எனினும், மோதலுக்குப் பின்னர் அமெரிக்கர், “நீங்கள் எனது கருத்தை நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் என்னைத் தாக்கினீர்கள்; நீங்கள் சிறைக்குச் செல்லப் போகிறீர்கள்” எனக் கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement