களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 8.59 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறையில் பரபரப்பு; துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 8.59 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.