வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
குறித்த தீ விபத்து இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேப்பங்குளம் காளிகோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் தீப்பற்றியதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக செயற்பட்டு, வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் அயலவர்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாதிருந்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் அதிகாலை பயங்கர விபத்து; வீடு முற்றாக எரிந்து நாசம் உயிர்ச்சேதம் தவிர்ப்பு வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளன.குறித்த தீ விபத்து இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வேப்பங்குளம் காளிகோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் தீப்பற்றியதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக செயற்பட்டு, வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் அயலவர்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாதிருந்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.