• Jul 04 2026

பிள்ளைகளின் போதைப்பொருள் பயன்பாட்டை அறியும் 'டெஸ்ட் கிட்': சந்தைக்கு அறிமுகப்படுத்த அரசு ஆலோசனை!

Chithra / Jul 3rd 2026, 10:44 am
image


பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் வீட்டிலிருந்தபடியே தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயல்பாட்டுச் சபை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் சமயத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுவது குறித்து ஆராயப்பட்டது.


நச்சுப் போதைப்பொருள் தொடர்பான தற்போதைய சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரத் திருத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், அதனை விரைவில் வர்த்தமானி (Gazette) மூலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். 


போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார். 


சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70% போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 


பாடசாலை மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்ததுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 


பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். 


தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் உரிமையாளர்களை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 


கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புக்களை விரைவாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், வழக்குகளுக்கு தொடர்பான பொருட்கள் முகாமைத்துவத்திற்கான தன்னியக்க கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவது மற்றும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்கு சட்டத்துறை மற்றும் விஞ்ஞானத் துறையின் நிபுணத்துவ ஆதரவைப் பெற்று, ஆய்வுகூட வசதிகளை பரவலாக்கம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

 

பிள்ளைகளின் போதைப்பொருள் பயன்பாட்டை அறியும் 'டெஸ்ட் கிட்': சந்தைக்கு அறிமுகப்படுத்த அரசு ஆலோசனை பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் வீட்டிலிருந்தபடியே தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயல்பாட்டுச் சபை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் சமயத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுவது குறித்து ஆராயப்பட்டது.நச்சுப் போதைப்பொருள் தொடர்பான தற்போதைய சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரத் திருத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், அதனை விரைவில் வர்த்தமானி (Gazette) மூலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார். சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70% போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்ததுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் உரிமையாளர்களை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புக்களை விரைவாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், வழக்குகளுக்கு தொடர்பான பொருட்கள் முகாமைத்துவத்திற்கான தன்னியக்க கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவது மற்றும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்கு சட்டத்துறை மற்றும் விஞ்ஞானத் துறையின் நிபுணத்துவ ஆதரவைப் பெற்று, ஆய்வுகூட வசதிகளை பரவலாக்கம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.  

Advertisement

Advertisement

Advertisement