• May 17 2024

தமிழர் பகுதியில் களைகட்டும் தைத்திருநாள் - ஆரம்பமான பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள்..!

Chithra / Jan 14th 2024, 2:56 pm
image

Advertisement


தைத்திருநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

2024ம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் = "ஊர் ஒன்று படுவோம்" எனும்  தொனிப் பொருளிலே இன்று  காலை முதல் முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில்  விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 

நாளை முல்லைத்தீவு அமைப்பின் ஏற்பாட்டில்,

 கயிறு இழுத்தல், கிளித்தட்டு, தலகணை சண்டை, முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகுபின்னுதல், மோட்டார் சைக்கிள் மெதுவாக ஓடுதல், வினோத உடை, கிறிஸ்மரம் ஏறுதல் என பல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை தடகள போட்டியின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அகிலத்திருநாயகிக்கு   கௌரவிப்பு நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் மாலை இடம்பெறவுள்ளது.


தமிழர் பகுதியில் களைகட்டும் தைத்திருநாள் - ஆரம்பமான பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள். தைத்திருநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.2024ம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் = "ஊர் ஒன்று படுவோம்" எனும்  தொனிப் பொருளிலே இன்று  காலை முதல் முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில்  விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. நாளை முல்லைத்தீவு அமைப்பின் ஏற்பாட்டில், கயிறு இழுத்தல், கிளித்தட்டு, தலகணை சண்டை, முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகுபின்னுதல், மோட்டார் சைக்கிள் மெதுவாக ஓடுதல், வினோத உடை, கிறிஸ்மரம் ஏறுதல் என பல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகிறது.இதேவேளை தடகள போட்டியின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அகிலத்திருநாயகிக்கு   கௌரவிப்பு நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் மாலை இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement