தாய்லாந்தில் சுற்றுலா சென்றிருந்த 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மலிவான கட்டணத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 3 பேரை அழைத்துச் சென்று, அவர்களை கடத்தி பணம் கேட்டு சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் 5 இந்தியர்கள் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடத்தப்பட்ட 3 பேரும் 23 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரும் குறைந்த செலவில் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி அவர்களிடம் 2 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, பாங்காக் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், காரில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
அதன் பின்னர், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைத்து சித்திரவதை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்ட கும்பல், அவர்களை விடுவிக்க பணம் வழங்குமாறு மிரட்டியுள்ளனர். கடத்தல் கும்பல் தங்களது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அரபு நாடுகளில் இருந்து பெறப்பட்ட சிம் அட்டைகளை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தாய்லாந்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த தாய்லாந்து பொலிஸார், கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்து, அங்கு சென்று 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட 3 இந்திய இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் போலிசாரிடம் கூறுகையில்,
தங்களைப் போல் மற்றொரு இந்திய இளைஞரையும் அவர்கள் கடத்தி வைத்திருந்ததாகவும், அந்த இளைஞரின் குடும்பத்தினர் கடத்தல்காரர்கள் கேட்ட ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டதால், அந்த நபரை அவர்கள் விடுவித்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் 5 பேரையும் கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், அந்த நபருடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு திட்டங்களை வகுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம், இந்த கடத்தல் திட்டம் துபாயில் இருந்து செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மலிவு கட்டணத்தில் தாய்லாந்து சுற்றுலா; ஆசைப்பட்டு சென்ற இந்தியர்களை கடத்தி சித்திரவதை தாய்லாந்தில் சுற்றுலா சென்றிருந்த 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.மலிவான கட்டணத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 3 பேரை அழைத்துச் சென்று, அவர்களை கடத்தி பணம் கேட்டு சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் 5 இந்தியர்கள் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடத்தப்பட்ட 3 பேரும் 23 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட ஐவரும் குறைந்த செலவில் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.கடந்த 21ஆம் திகதி அவர்களிடம் 2 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, பாங்காக் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், காரில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.அதன் பின்னர், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைத்து சித்திரவதை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்ட கும்பல், அவர்களை விடுவிக்க பணம் வழங்குமாறு மிரட்டியுள்ளனர். கடத்தல் கும்பல் தங்களது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அரபு நாடுகளில் இருந்து பெறப்பட்ட சிம் அட்டைகளை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தாய்லாந்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த தாய்லாந்து பொலிஸார், கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்து, அங்கு சென்று 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.காப்பாற்றப்பட்ட 3 இந்திய இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் போலிசாரிடம் கூறுகையில், தங்களைப் போல் மற்றொரு இந்திய இளைஞரையும் அவர்கள் கடத்தி வைத்திருந்ததாகவும், அந்த இளைஞரின் குடும்பத்தினர் கடத்தல்காரர்கள் கேட்ட ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டதால், அந்த நபரை அவர்கள் விடுவித்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் 5 பேரையும் கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், அந்த நபருடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு திட்டங்களை வகுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம், இந்த கடத்தல் திட்டம் துபாயில் இருந்து செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.