கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றது இன்னமும் இந்த மக்களுக்கு எதுவிதமான தீர்வுகளையும் வழங்க முடியாத ஒரு துர்பாக்கியமான சூழ்நிலையில் தான் இந்த நாடு இருக்கின்றது என நல்லட்சிக்கான தேசிய முன்னணி செயலாளர் அப்துல் லெத்தீப் முஹம்மது ஸமீல் தெரிவித்தார்.
சம உரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் சும உரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்,
கடந்த காலங்களில் இந்த நாட்டிலே இடம்பெற்ற படுகொலைகள் ஆக்கிரமிப்புகள் கொலை சம்பவங்கள் தொடர்பாக இப்பொழுது அரசாங்கம் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த அடிப்படையில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடையும் தான் பட்டலந்த ஆணைக்குழு தொடர்பான விடயம். அதில் பாதிக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அவர்களுடைய உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று அனைவருமாக இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
உண்மையில் அரசியல்வாதிகள் உடைய அழுத்தத்தின் காரணமாக இந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எல்லோருமே நம்புகின்றார்கள்.
எனவே கண்டிப்பாக இந்த விடயத்தை வெறுமனே பேசு பொருளாக மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் இந்த விடயத்தில் கண்டிப்பாக ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
கண்டிப்பாக இந்த விடயம் என்பது தெற்கில் வடக்கில் எல்லா இடங்களிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
அதற்கு உரிய விசாரணைகளை மேற்கொண்டு கண்டிப்பாக அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி இந்த விடயங்களை செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அரசாங்கத்திற்கு இந்த மக்கள் பெரும்பான்மையான ஆதரவை வழங்கி இருக்கின்றார்கள் நான் நினைக்கின்றேன் இன்னும் அவர்களுக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் மாத்திரம் தான் கிடைக்க வேண்டும் இந்த விடயங்களை செய்வதற்கு என்று அவர்கள் இன்னமும் காத்திருக்க முடியாது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் முழு ஆதரவையும் அதிகாரத்தையும் இந்த அரசுக்கு வழங்கி இருக்கின்றார்கள்.
எனவே கண்டிப்பாக இவ்வாறான படுகொலைகள் அது எந்த பிரதேசத்தில் நடைபெற்றாலும் சரி உண்மையில் கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதே போன்று தமிழ் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அதேபோன்று முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுடைய சொத்துக்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றது இன்னமும் இந்த மக்களுக்கு எதுவிதமான தீர்வுகளையும் வழங்க முடியாத ஒரு துர்பாக்கியமான சூழ்நிலையில் தான் இந்த நாடு இருக்கின்றது.
எனவேதான் புதிய அரசாங்கம் இதற்கு உரிய தீர்வுகளை பெற்று தர வேண்டும் ஏனெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டிருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் இந்த முறை இந்த அரசாங்கம் இதனை நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் இந்த அரசாங்கமும் எந்த வேலை திட்டங்களையும் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவே சம உரிமை இயக்கத்தின் அடிப்படையில் இந்த விடயங்களை உங்களிடத்தில் வேண்டிக் கொள்கின்றோம்.
அதேபோன்று உங்களுக்கு தெரியும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது எல்லா மக்களாலும் எதிர்க்கக் கூடிய ஒருபோதுமே இந்த நாட்டினுடைய பிரஜை விரும்பாத ஒரு சட்டமாக இந்த சட்டமூலம் இருக்கின்றது.
நான் நினைக்கின்றேன் தேசிய மக்கள் சக்தி தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் அல்லது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நாங்கள் முற்று முழுதாக நீக்குவோம் என்று மக்கள் மத்தியில் அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பிய மக்கள் ஆணையை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள்.
எனவே எதுவிதமான காரணங்களையும் கூறாமல் கண்டிப்பாக இந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது பிரதானமான கோரிக்கை. ஏனென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் இருக்கின்றார்கள் தமிழ் மக்கள் இப்போது இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அடக்குகின்ற அந்த வேலைத்திட்டத்திலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
எனவே எதிர்விதத்திலும் நாங்கள் இதனை அங்கீகரிக்க முடியாது அந்த பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும். இந்த நாட்டில் போதிய அளவு சட்டங்கள் காணப்படுகின்றது அதாவது என்ன என்ன குற்றங்களுக்கு அந்த குற்றங்களுக்கான என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று போதிய அளவு சட்டங்கள் காணப்படுகின்றது வெறுமனே இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கின்ற சமூக செயற்பாட்டாளர்களை அல்லது இந்த அரசாங்க செயல்பாடுகளை கண்டிப்பவர்களை இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக கைது செய்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது ஜனாதிபதியின் உடைய அதிகாரத்தின் கீழ் இந்த விசாரணையை உட்படுத்துவது என்பது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எனவே இந்த இரண்டு விடயங்களையும் வலியுறுத்தி கூற விரும்புகின்றோம் ஒன்று இந்த நாட்டிலே கடந்த காலங்களில் இடம்பெற்ற அந்த பயங்கரவாத சம்பவங்களை அரசாங்கம் உரிய முறையில் விசாரித்து அதனை செய்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அதற்கு பின்னால் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சம உரிமை இயக்கத்தின் அடிப்படையில் மற்றும் இந்த நாட்டினுடைய பொறுப்புள்ள பிரஜை என்கின்ற அடிப்படையிலும் இந்த அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம்.
பட்டலந்த விவகாரம்; கண்டிப்பாக ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அப்துல் லெத்தீப் முஹம்மது கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றது இன்னமும் இந்த மக்களுக்கு எதுவிதமான தீர்வுகளையும் வழங்க முடியாத ஒரு துர்பாக்கியமான சூழ்நிலையில் தான் இந்த நாடு இருக்கின்றது என நல்லட்சிக்கான தேசிய முன்னணி செயலாளர் அப்துல் லெத்தீப் முஹம்மது ஸமீல் தெரிவித்தார்.சம உரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் சும உரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்,கடந்த காலங்களில் இந்த நாட்டிலே இடம்பெற்ற படுகொலைகள் ஆக்கிரமிப்புகள் கொலை சம்பவங்கள் தொடர்பாக இப்பொழுது அரசாங்கம் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.அந்த அடிப்படையில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடையும் தான் பட்டலந்த ஆணைக்குழு தொடர்பான விடயம். அதில் பாதிக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அவர்களுடைய உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று அனைவருமாக இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.உண்மையில் அரசியல்வாதிகள் உடைய அழுத்தத்தின் காரணமாக இந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எல்லோருமே நம்புகின்றார்கள்.எனவே கண்டிப்பாக இந்த விடயத்தை வெறுமனே பேசு பொருளாக மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் இந்த விடயத்தில் கண்டிப்பாக ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.கண்டிப்பாக இந்த விடயம் என்பது தெற்கில் வடக்கில் எல்லா இடங்களிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது.அதற்கு உரிய விசாரணைகளை மேற்கொண்டு கண்டிப்பாக அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி இந்த விடயங்களை செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.அரசாங்கத்திற்கு இந்த மக்கள் பெரும்பான்மையான ஆதரவை வழங்கி இருக்கின்றார்கள் நான் நினைக்கின்றேன் இன்னும் அவர்களுக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் மாத்திரம் தான் கிடைக்க வேண்டும் இந்த விடயங்களை செய்வதற்கு என்று அவர்கள் இன்னமும் காத்திருக்க முடியாது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் முழு ஆதரவையும் அதிகாரத்தையும் இந்த அரசுக்கு வழங்கி இருக்கின்றார்கள்.எனவே கண்டிப்பாக இவ்வாறான படுகொலைகள் அது எந்த பிரதேசத்தில் நடைபெற்றாலும் சரி உண்மையில் கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதே போன்று தமிழ் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அதேபோன்று முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றது இன்னமும் இந்த மக்களுக்கு எதுவிதமான தீர்வுகளையும் வழங்க முடியாத ஒரு துர்பாக்கியமான சூழ்நிலையில் தான் இந்த நாடு இருக்கின்றது.எனவேதான் புதிய அரசாங்கம் இதற்கு உரிய தீர்வுகளை பெற்று தர வேண்டும் ஏனெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டிருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் இந்த முறை இந்த அரசாங்கம் இதனை நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் இந்த அரசாங்கமும் எந்த வேலை திட்டங்களையும் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவே சம உரிமை இயக்கத்தின் அடிப்படையில் இந்த விடயங்களை உங்களிடத்தில் வேண்டிக் கொள்கின்றோம்.அதேபோன்று உங்களுக்கு தெரியும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது எல்லா மக்களாலும் எதிர்க்கக் கூடிய ஒருபோதுமே இந்த நாட்டினுடைய பிரஜை விரும்பாத ஒரு சட்டமாக இந்த சட்டமூலம் இருக்கின்றது. நான் நினைக்கின்றேன் தேசிய மக்கள் சக்தி தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் அல்லது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நாங்கள் முற்று முழுதாக நீக்குவோம் என்று மக்கள் மத்தியில் அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பிய மக்கள் ஆணையை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள்.எனவே எதுவிதமான காரணங்களையும் கூறாமல் கண்டிப்பாக இந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது பிரதானமான கோரிக்கை. ஏனென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் இருக்கின்றார்கள் தமிழ் மக்கள் இப்போது இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அடக்குகின்ற அந்த வேலைத்திட்டத்திலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.எனவே எதிர்விதத்திலும் நாங்கள் இதனை அங்கீகரிக்க முடியாது அந்த பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும். இந்த நாட்டில் போதிய அளவு சட்டங்கள் காணப்படுகின்றது அதாவது என்ன என்ன குற்றங்களுக்கு அந்த குற்றங்களுக்கான என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று போதிய அளவு சட்டங்கள் காணப்படுகின்றது வெறுமனே இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கின்ற சமூக செயற்பாட்டாளர்களை அல்லது இந்த அரசாங்க செயல்பாடுகளை கண்டிப்பவர்களை இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக கைது செய்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது ஜனாதிபதியின் உடைய அதிகாரத்தின் கீழ் இந்த விசாரணையை உட்படுத்துவது என்பது மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.எனவே இந்த இரண்டு விடயங்களையும் வலியுறுத்தி கூற விரும்புகின்றோம் ஒன்று இந்த நாட்டிலே கடந்த காலங்களில் இடம்பெற்ற அந்த பயங்கரவாத சம்பவங்களை அரசாங்கம் உரிய முறையில் விசாரித்து அதனை செய்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அதற்கு பின்னால் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவது இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சம உரிமை இயக்கத்தின் அடிப்படையில் மற்றும் இந்த நாட்டினுடைய பொறுப்புள்ள பிரஜை என்கின்ற அடிப்படையிலும் இந்த அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம்.