• Dec 03 2024

மலையேறியவர் மீது சரிந்து வீழ்ந்த கற்பாறை; இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

Chithra / Aug 11th 2024, 4:09 pm
image

அம்புலுவாவ மலைப்பகுதியில்  தவறான பாதையில் ஏறச் சென்ற நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டபோது, விபத்துக்குள்ளான நபர் மனைவியிடம் கூறாமல் தனது நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மலையேறியவர் மீது சரிந்து வீழ்ந்த கற்பாறை; இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம் அம்புலுவாவ மலைப்பகுதியில்  தவறான பாதையில் ஏறச் சென்ற நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நான்கு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது.இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டபோது, விபத்துக்குள்ளான நபர் மனைவியிடம் கூறாமல் தனது நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement