டிட்வா பேரிடர் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பக்கலை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்தன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது.
இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
தற்பொழுது கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பக்கடை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.
அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்போக்கரை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுக்கின்றனர் இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.
முல்லை - கிளிநொச்சிக்கு இடைப்பட்ட பாலம் முற்றாக சேதம் டிட்வா பேரிடர் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பக்கலை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்தன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது. இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.தற்பொழுது கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பக்கடை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர். அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்போக்கரை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுக்கின்றனர் இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.