• May 17 2026

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம்!

Chithra / May 17th 2026, 12:18 pm
image

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில்  இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. 


தமிழரசுகட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில், செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத்,இரா.சாணக்கியன் உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


இக்கூட்டத்தில் தமிழ்கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும்,  புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம் தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில்  இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழரசுகட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில், செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத்,இரா.சாணக்கியன் உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும்,  புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement