ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் கே.வி. குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு சிலர் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தத்தைக் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணை அந்த நபர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதையடுத்து, தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
மேலும், பெண்ணின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், கீழே விழுந்த பெண்ணிற்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், "ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும்.
அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அவருக்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் கே.வி. குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.அங்கு சிலர் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தத்தைக் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணை அந்த நபர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.இதையடுத்து, தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.மேலும், பெண்ணின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், கீழே விழுந்த பெண்ணிற்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், "ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும்.அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அவருக்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.