• May 21 2025

மீன்பிடிக்கச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை - தேடுதல் பணிகள் தீவிரம்

Chithra / May 21st 2025, 12:50 pm
image

 

மட்டக்களப்பு மண்முனை பாலத்தினை அண்டிய  களப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளங்குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

குறித்த நபர் நேற்று மூவருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலங்களில் இப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்  இச் சம்பவம் துரதிஷ்டவசமாக நேற்றிரவு நடந்தேறியுள்ளமை இப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரைத் தேடும் நடவடிக்கைகளை தற்போது காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடற்படை தலைமையகம் மற்றும் கஜுவத்தை கடற்படை முகாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை - தேடுதல் பணிகள் தீவிரம்  மட்டக்களப்பு மண்முனை பாலத்தினை அண்டிய  களப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளங்குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.குறித்த நபர் நேற்று மூவருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மைக்காலங்களில் இப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்  இச் சம்பவம் துரதிஷ்டவசமாக நேற்றிரவு நடந்தேறியுள்ளமை இப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரைத் தேடும் நடவடிக்கைகளை தற்போது காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடற்படை தலைமையகம் மற்றும் கஜுவத்தை கடற்படை முகாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement