• Nov 27 2024

தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை- கஜேந்திரன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 8th 2024, 9:33 pm
image

வடகிழக்கில் இருந்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடக சந்திப்பு இன்று (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ள நிலையில் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றோம்.

75 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யாத நிலையில், தற்போது ஒரு  ஆட்சி மாற்றத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் இவர்களும் கூட தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை.

2009ல் உரிமை போராட்டம் நிறைவுற்றதும் தமிழ் தேசம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமக்கு மேற்கொள்ளப்பட்டது மனித உரிமை மீறல் தொடர்பாக 15 தடவைகள் அங்கு சென்று உரக்கக் கூறியது எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே.

அத்தோடு கொழும்பிலோ வெளிநாட்டிலோ எமக்காக தூதுவர்களிடமோ, ஏனையவர்களிடமோ 13 தீர்வுக்கான ஆரம்ப புள்ளி அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இன நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டுமானால் சமஸ்டியே தீர்வு என கூறும் ஒருவர் எமது தலைவர் மாத்திரமே.

மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களில் எமது மக்களுக்கான போராட்டங்களில் எமது தலைவர் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுமுள்ளார்.

மயிலத்தமடுவிற்கு கூட எமது தலைவர் வருகை தந்த போது பௌத்த பிக்குவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அங்கு சிங்கள மயமாக்கல் மேற்கொள்ள முயற்சித்த போது எமது தலைவர் முன்னிற்று செயற்பட்டவர்.

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.

தென் தமிழ் ஈழம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பிலும் போட்டியிடும் 8 வேட்பாளர்களுக்கும் உங்களது பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதற்காக எமது அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை- கஜேந்திரன் சுட்டிக்காட்டு. வடகிழக்கில் இருந்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடக சந்திப்பு இன்று (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது.இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ள நிலையில் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றோம்.75 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யாத நிலையில், தற்போது ஒரு  ஆட்சி மாற்றத்தினை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்களும் கூட தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை.2009ல் உரிமை போராட்டம் நிறைவுற்றதும் தமிழ் தேசம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமக்கு மேற்கொள்ளப்பட்டது மனித உரிமை மீறல் தொடர்பாக 15 தடவைகள் அங்கு சென்று உரக்கக் கூறியது எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே.அத்தோடு கொழும்பிலோ வெளிநாட்டிலோ எமக்காக தூதுவர்களிடமோ, ஏனையவர்களிடமோ 13 தீர்வுக்கான ஆரம்ப புள்ளி அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் இன நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டுமானால் சமஸ்டியே தீர்வு என கூறும் ஒருவர் எமது தலைவர் மாத்திரமே.மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களில் எமது மக்களுக்கான போராட்டங்களில் எமது தலைவர் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுமுள்ளார்.மயிலத்தமடுவிற்கு கூட எமது தலைவர் வருகை தந்த போது பௌத்த பிக்குவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.அங்கு சிங்கள மயமாக்கல் மேற்கொள்ள முயற்சித்த போது எமது தலைவர் முன்னிற்று செயற்பட்டவர்.வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.தென் தமிழ் ஈழம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பிலும் போட்டியிடும் 8 வேட்பாளர்களுக்கும் உங்களது பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதற்காக எமது அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement