ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 92 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு அக்கட்சி செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவித்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதேவேளை, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அண்மையில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணைகளின் பின்னர் அவர்களது உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர்கள் நீக்கப்பட்டு மாவட்ட விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டு கட்சி எம்.பி களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 92 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு அக்கட்சி செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவித்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.அதேவேளை, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அண்மையில் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒழுக்காற்று விசாரணைகளின் பின்னர் அவர்களது உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அவர்கள் நீக்கப்பட்டு மாவட்ட விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.