• Sep 29 2024

கோட்டாவால் முடியாததை ரணில் கையில் எடுக்கும் ஆபத்து...! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை...!

Sharmi / Jun 24th 2024, 1:55 pm
image

Advertisement

தேர்தலிலே ரணில்விக்ரமசிங்கவால் வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ராணுவத்தை வைத்து மக்களை அடக்குவார். கோட்டாபய ராஜபக்சவுக்கு செய்ய முடியாதவற்றை கூட அவரால் செய்யக்கூடிய ஆபத்து உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

சமூகம் மீடியாவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார் 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

யுத்தம் முடிவடைந்த பிற்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராகவும், சஜித் பிரேமதாஸ பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வேளையில் அனுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத்திலே இருந்தார்.

அந்தவேளையிலே, ஐக்கிய தேசிய கட்சி தங்களுடைய கொள்கை பிரகடனமாக பாராளுமன்றத்திலே 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம் என கூறியிருந்தார்கள்.

சஜித்பிரேமதாஸ கடந்த தனது தேர்தல் அறிக்கையிலே 13ம் திருத்தச்சட்டத்தை கடந்து பல விடயங்களை கூறியிருந்தார். தற்போதும் 13ம் திருத்தச்சட்டத்தை அழுல்படுத்துவேன் என யாழில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதனைப் போலவே அனுரகுமாரதிஸநாயக்கவும் கூறியுள்ளார்

ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரையில் ஜனாதிபதி ஆகியவுடன் 2022ம் ஆண்டு பாராளுமன்றத்திலேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான தயாரா எனக்கூறி சர்வகட்சி மாநாட்டை கூட்டி சில நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் எதுவும் அழுல்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரத்தை மாத்திரம் இப்போது அமுல்படுத்த முடியாது என கூறுகின்றார்.

இந்த நிலையிலே மூவருக்கும் மும்முனை போட்டி ஏற்பட்டிருக்கின்ற பின்னணியிலே மூவருடனும் பேரம் பேசுகின்ற வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தலை பிற்போட்டு தனது பதவிக்காலத்தை நீட்டிக்க  வாய்ப்பு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எம்.எ.சுமந்திரன், 

தற்செயலாக ஒருவருடத்திற்கு தேர்தலை பிற்போட வேண்டும் என தீர்மானித்து அதற்கான ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்தால் உயர்நீதிமன்றம் இதை நிறைவேற்றுவதாக இருந்தால் சர்வஜன வாக்குரிமை தேவை என சில வாக்குறுதிகளை கொடுத்தால் அதை புறம்தள்ளிவிட்டு பாராளுமன்றத்தில் மாத்திரம் அதை செயற்படுத்துவதற்கு தயாராகி வருகின்றார் 

தேர்தலிலே ரணில் விக்ரமசிங்கவால் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ராணுவத்தை வைத்து மக்களை அடக்குவார். கோட்டாபய ராஜபக்ச செய்ய முடியாதவற்றை கூட இவரால் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது.

மேலும், நாட்டினுடைய பொருளாதாரத்தை உயர்வடைய வைத்து மக்களின் மனதில் இடம்பிடிக்க ரணில் விக்ரமசிங்க எண்ணுகின்றார்

சீனாவைத் தவிர அனைத்து நாடுகளும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வரவேண்டும் என நினைக்கின்றார்கள்.  ஆனால் கருத்துக்கணிப்பின் படி ரணில்விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலே உள்ளார்

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் இணைந்த ஒரு கட்சியாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி ஒரு பலமான கட்சியாக இருக்கும். அதிலும் விசேடமாக மொட்டுக்கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தினால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பினை குறைத்துவிடும் 

பாராளுமன்ற தேர்தல் வரும் பொழுது தேசிய மக்கள் சக்தியினருக்கு கூடுதலான வாக்கு கிடைக்கும்.  அவர்களே பிரதான எதிர்க்கட்சியினராக வருவார்கள் என்பதே தற்போதைய சூழ்நிலை என அவர் தெரிவித்துள்ளார்.



கோட்டாவால் முடியாததை ரணில் கையில் எடுக்கும் ஆபத்து. சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை. தேர்தலிலே ரணில்விக்ரமசிங்கவால் வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இராணுவத்தை வைத்து மக்களை அடக்குவார். கோட்டாபய ராஜபக்சவுக்கு செய்ய முடியாதவற்றை கூட அவரால் செய்யக்கூடிய ஆபத்து உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்சமூகம் மீடியாவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பிற்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராகவும், சஜித் பிரேமதாஸ பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வேளையில் அனுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத்திலே இருந்தார்.அந்தவேளையிலே, ஐக்கிய தேசிய கட்சி தங்களுடைய கொள்கை பிரகடனமாக பாராளுமன்றத்திலே 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம் என கூறியிருந்தார்கள்.சஜித்பிரேமதாஸ கடந்த தனது தேர்தல் அறிக்கையிலே 13ம் திருத்தச்சட்டத்தை கடந்து பல விடயங்களை கூறியிருந்தார். தற்போதும் 13ம் திருத்தச்சட்டத்தை அழுல்படுத்துவேன் என யாழில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதனைப் போலவே அனுரகுமாரதிஸநாயக்கவும் கூறியுள்ளார்ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரையில் ஜனாதிபதி ஆகியவுடன் 2022ம் ஆண்டு பாராளுமன்றத்திலேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான தயாரா எனக்கூறி சர்வகட்சி மாநாட்டை கூட்டி சில நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் எதுவும் அழுல்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரத்தை மாத்திரம் இப்போது அமுல்படுத்த முடியாது என கூறுகின்றார்.இந்த நிலையிலே மூவருக்கும் மும்முனை போட்டி ஏற்பட்டிருக்கின்ற பின்னணியிலே மூவருடனும் பேரம் பேசுகின்ற வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளதுஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தலை பிற்போட்டு தனது பதவிக்காலத்தை நீட்டிக்க  வாய்ப்பு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எம்.எ.சுமந்திரன், தற்செயலாக ஒருவருடத்திற்கு தேர்தலை பிற்போட வேண்டும் என தீர்மானித்து அதற்கான ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்தால் உயர்நீதிமன்றம் இதை நிறைவேற்றுவதாக இருந்தால் சர்வஜன வாக்குரிமை தேவை என சில வாக்குறுதிகளை கொடுத்தால் அதை புறம்தள்ளிவிட்டு பாராளுமன்றத்தில் மாத்திரம் அதை செயற்படுத்துவதற்கு தயாராகி வருகின்றார் தேர்தலிலே ரணில் விக்ரமசிங்கவால் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், இராணுவத்தை வைத்து மக்களை அடக்குவார். கோட்டாபய ராஜபக்ச செய்ய முடியாதவற்றை கூட இவரால் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது.மேலும், நாட்டினுடைய பொருளாதாரத்தை உயர்வடைய வைத்து மக்களின் மனதில் இடம்பிடிக்க ரணில் விக்ரமசிங்க எண்ணுகின்றார்சீனாவைத் தவிர அனைத்து நாடுகளும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வரவேண்டும் என நினைக்கின்றார்கள்.  ஆனால் கருத்துக்கணிப்பின் படி ரணில்விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலே உள்ளார்ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் இணைந்த ஒரு கட்சியாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி ஒரு பலமான கட்சியாக இருக்கும். அதிலும் விசேடமாக மொட்டுக்கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தினால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பினை குறைத்துவிடும் பாராளுமன்ற தேர்தல் வரும் பொழுது தேசிய மக்கள் சக்தியினருக்கு கூடுதலான வாக்கு கிடைக்கும்.  அவர்களே பிரதான எதிர்க்கட்சியினராக வருவார்கள் என்பதே தற்போதைய சூழ்நிலை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement