• Jul 15 2026

பிறந்தநாளன்று மனைவிக்கு காத்திருந்த மரண பரிசு- சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி தப்பியோட்டம்!

Ziya / Jul 15th 2026, 3:38 pm
image

இந்தியாவின் டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக, பிறந்தநாளன்றே தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


பொலிஸார் தெரிவிப்பதாவது, டெல்லி கிழக்கு மாவட்ட வாகனத் திருட்டு தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றிய 24 வயதான பிரியங்கா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


தம்பதியினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பிரியங்கா தனது சகோதரரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், ஜூலை 13 ஆம் திகதி பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். 


கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை அருகே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மனிஷ் பதி தனது வசமிருந்த துப்பாக்கியால் பிரியங்காவை சுட்டதாகக் கூறப்படுகிறது.


படுகாயமடைந்த பிரியங்காவை அவ்வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.


சம்பவத்துக்குப் பின்னர் தப்பியோடிய மனிஷ் பதியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


பிறந்தநாளன்று மனைவிக்கு காத்திருந்த மரண பரிசு- சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி தப்பியோட்டம் இந்தியாவின் டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக, பிறந்தநாளன்றே தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பொலிஸார் தெரிவிப்பதாவது, டெல்லி கிழக்கு மாவட்ட வாகனத் திருட்டு தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றிய 24 வயதான பிரியங்கா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.தம்பதியினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பிரியங்கா தனது சகோதரரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், ஜூலை 13 ஆம் திகதி பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை அருகே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மனிஷ் பதி தனது வசமிருந்த துப்பாக்கியால் பிரியங்காவை சுட்டதாகக் கூறப்படுகிறது.படுகாயமடைந்த பிரியங்காவை அவ்வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.சம்பவத்துக்குப் பின்னர் தப்பியோடிய மனிஷ் பதியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Advertisement

Advertisement

Advertisement